நிரந்தரமாக மெனு பார்: விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் Alt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும் படியும் இதனை அமைக்கலாம். போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் ‘Folder and search options’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Always show menus’ என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
விண்டோஸ் பார்டர்களை குறைக்க: விஸ்டாவின் ஏரோ கிராபிக்ஸ் புரோகிராம்களுக்கும் போல்டர்களுக்கும் நல்ல திட்டையான பார்டர்களைத் தருகிறது. இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் போன்ற புரோகிராம்களைக் கையாள்கையில் இந்த பார்டர்கள் அதிகம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன.
இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி நாம் பணியாற்ற இடம் தராமல் எரிச்சலூட்டு கின்றன. இந்த பார்டர்களின் அளவைக் குறைக்க முடியாதா என்ற ஆசை நமக்கு எழும். இதற்கு வழிகளைத் தருகிறது விஸ்டா. இந்த பார்டர்களை அளவோடு வைத்திட டெஸ்க்டாப்பில் கிளிக் செய்திடவும். பின் பெர்சனலைஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Windows Color and Appearance என்ற இடத்தில் கிளிக் செய்திடவும்.
இப்போது செட் செய்வதற்கான டயலாக் பாக்ஸ் கிடைக்க வேண்டும். இது கிடைக்காவிட்டால் ‘Open classic appearance properties for more color options’ என்பதில் கிளிக் செய்திடவும். அதில் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் மெனுவில் Border Padding என்பதைத் தேர்ந் தெடுக்கவும். இங்கு சைஸ் செட்டிங் அளவை 4க்கும் குறைவாக அமைக்கவும். அதன்பின் ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை விண்டோக்கள் திறந்தாலும் பார்டர்கள் எடுக்கும் இடம் குறைவாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக