அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 27 ஜூலை, 2013

ஜிமெயில் அஞ்சல்களில் ரைட் கிளிக்

முன்னர் ஜிமெயில் அஞ்சல்களில் ரைட் கிளிக் செய்து, அதனை முன்னோட்டமாகப் (Preview) பார்க்க முடிந்தது. இப்போது அந்த வசதி கிடைப்பதில்லை.ஜிமெயில் தளத்தில், அதன் சேவையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இதில் பழையனவற்றில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. புதிய வசதிகள் தரப்படுகின்றன. துரதிருஷ்டவசமாக, முன்பு தரப்பட்ட சில வசதிகள் நீக்கப்படுகின்றன. மேற்குறிப்பிடும் அஞ்சல் முன்னோட்டமும் இதில் ஒன்று.

ஆனால், உங்களுக்கு அஞ்சல் முன்னோட்டம் தேவை எனில், அதற்கான சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

பயர்பாக்ஸ் பிரவுசரின் எக்ஸ்டன்ஷன்கள் (“extensions”), இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆட் இன்ஸ் (“addins”) போல, ஜிமெயிலிலும் தர்ட் பார்ட்டி டூல்ஸ்கள் கிடைக்கின்றன. இவற்றை “labs” என்ற பிரிவில் கூகுள் தருகிறது.
இங்கு அஞ்சல் முன்னோட்டத்திற்கென ஒரு பிரிவு உள்ளது. இதனை இயக்கினால், உங்களுக்கு முன்னோட்ட வசதி கிடைக்கும்.

இதனைப் பெற, ஜிமெயில் தளப் பக்கத்தில், மேலாக, வலதுபுறம் உள்ள சிறிய கருப்பு சக்கரத்தில் கிளிக் செய்திடவும்.

பின்னர், கிடைக்கும் பக்கத்தில், “Settings” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த தலைப்பின் கீழ் labs என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.

இனி, சற்றுப் பொறுமையாகக் கீழாக வந்தால், அங்கு Preview Pane என்று ஒரு தலைப்பு இருப்பதைப் பார்க்கலாம்.
அதன் கீழாகவே, இந்த புரோகிராமினை வடிவமைத்துத் தந்தவர்களின் பெயர்களையும் பார்க்கலாம்.

இதன் எதிராக “Enable” என்று இருப்பதன் அருகே உள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். இனி, அஞ்சல் முன்னோட்ட வசதி உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த வசதி தேவை இல்லை என உணர்ந்தால், இதே இடத்திற்குச் சென்று “Disable” என்பதனைக் கிளிக் செய்திடலாம்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக