- ஆதவன் தீட்சண்யா
இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்றொரு செய்தி வேகவேகமாக பரப்பப்படுகிறது. அதாவது அவரது மரணத்தை தற்கொலையாக மட்டுமே பார்க்குமாறு நம்மை யாரோ தூண்டுகிறார்கள்.
இந்த சூது புரியாமல், ´இவ்வளவு நாளும் உறுதியாயிருந்த நீ இப்போது ஏனடா மாய்த்துக் கொண்டாய்?', ´ தம்பி நீ தைரியமா இருந்திருக்கணும்டா...', ´அறியாத வயதில் எடுத்த அவசர முடிவு' என்றெல்லாம் சென்டிமென்டாக உளறுகிறவர்களும் தங்களையறியாமலே இதை தற்கொலையாக நிறுவுகிறார்கள். சடலம் கிடக்கும் நிலையை மேலோட்டமாக பார்த்தாலேகூட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன.
1. ஆட்டோ மோதினால்கூட ஐந்தாறு அடி தூரம் தள்ளிப்போய் விழுவோம். ஆனால் ரயிலின் முன் பாய்ந்ததாக சொல்லப்படும் இளவரசனின் சடலம் தண்டவாளத்திற்கு அருகாமையில் நாலடிக்கும் குறைவான தூரத்திலேயே விழுந்து கிடக்கிறது.
2. சடலம் கிடந்த இடம் தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டருக்கும் கூடுதலான தூரத்தில் ரயில்நிலையம் இருப்பதால், குறிப்பிட்ட அப்பகுதியில் ரயிலின் வேகம் குறைக்கப்படுவதில்லை. எனில் வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு ரயிலின் முன்புதான் இளவரசன் பாய முடியும். அவ்வாறானால் இளவரசனின் உடல் வெகுதூரத்திற்கு வீசி எறியப்பட்டிருக்கும். தவிரவும், மோதிய வேகத்தில் உருவமே உருக்குலைந்து சதைத்துண்டங்களாகி தெறித்துச் சிதறியிருக்கும்.
ஒருவேளை குறைவான வேகத்தில் வந்த ரயிலின் முன் பாய்ந்திருந்தால், தூக்கி வீசுவதற்கு பதில் மோதிய வேகத்தில் ஆளை விழுத்தாட்டி தனது அடிபாகங்களால் அரைத்து கூழாக்கிவிட்டுத்தான் போயிருக்கும். ரயிலின் எந்த பாகத்தில் ஓரமாக மோதியிருந்தாலும் ஒட்டுமொத்த முகமுமே சிதைந்திருக்கும். ஆனால் இளவரசனின் ஒருபகுதி முகத்தில் மட்டுமே காயங்கள். மண்டையின் பின்புறமாக மோதியிருந்தாலும் ஒட்டுமொத்த தலையும் சிதைந்து சேதமடைந்திருக்கும்.
3. ரயிலின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்திருந்தாலும்கூட மல்லாந்த நிலையில் குறுக்குவாட்டாகத்தான் விழுந்திருக்க முடியும். இப்படி தண்டவாளத்துக்கு இணையாக அந்த மோரிக்கல்லின் (சிறுபாலத்தில்) ஓரத்தை அணைத்தபடி விழுவது சாத்தியமில்லை.
இளவரசனின் உடையில்கூட சிறு கசங்கலை ஏற்படுத்தாமல், உடலின் எந்த பாகத்திலும் சேதாரம் விளைவிக்காமல் முகத்தின் ஒரு பகுதியை மட்டுமே சிதைத்து மூளையை வெளியே இழுத்துச் சிதறவிட்டிருக்கிற வினோதமானதொரு ரயிலில் விழுந்த தற்கொலை'யை உலகம் இதுவரை கண்டதில்லை.
4. இளவரசன் - திவ்யா விஷயத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடந்த விசயங்களை தொகுத்துப் பார்த்தால் இது தற்கொலையாக இருக்க முடியாது என்கிற முடிவுக்கு எளிதில் வந்து சேரமுடியும். ´எனது தாய் சம்மதித்தால் எனது கணவருடன் இணைந்து வாழவே விரும்புகிறேன்' - என்று திவ்யா தெரிவித்த கருத்தை யாராலோ ஏற்க முடியவில்லை. அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே முதல்நாள் தெரிவித்த கருத்துக்கு மாறான நிலைப்பாட்டை மறுநாள் தெரிவிக்கிறார் திவ்யா.
அழுத்தங்கள் இல்லாத இயல்பான நிலையில் இளவரசனோடு சேர்ந்து வாழ்வதையே திவ்யா விரும்புகிறார் என்பதை இந்த இருவேறு நிலைப்பாடுகளிலிருந்து உணரமுடிகிறது. இளவரசன் உயிரோடு இருக்கும்வரை திவ்யாவிடம் இந்த ஊசலாட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதால்தான் இளவரசன் பிணமாக்கப்பட்டிருக்கிறார். எப்படி யாரால் பிணமாக்கப்பட்டார் என்பதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறதே தவிர தற்கொலையா கொலையா என்பதல்ல.
Thatstamil
"என் மகனை யாரோ கொன்று தண்டவாளம் அருகே போட்டுவிட்டு நாடகமாடுகிறார்கள்: இளவரசனின் தந்தை கண்ணீர்"
தர்மபுரி: என் மகனை யாரோ கொன்று ரயில் தண்டவாளம் அருகே போட்டுவிட்டு நாடகமாடுகிறார்கள் என்று இளவரசனின் தந்தை இளங்கோவன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகே தனது மகன் இளவரசன் பிணமாக கிடப்பது குறித்து அறிந்து இளங்கோவன் அங்கு ஓடி வந்தார். பிணமாக கிடப்பது தனது மகன் தான் என்பதை பார்த்ததும் அவர் கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மகன் திவ்யாவை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டான். அன்று முதல் அவர்கள் மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் பெங்களூரில் குடித்தனம் நடத்தினர். பின்னர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்து நான் அவர்களை இங்கு அழைத்து வந்தேன். அவர்கள் இங்கு வந்த பிறகு திவ்யாவை அவரது தாய் மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி சந்தித்து பேசினர். திவ்யாவின் குடும்பத்தினரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தால் உடனே அவர் மாடிக்கு சென்று பேசுவார்.
அவரது குடும்பத்தார் அவரின் மனதை மாற்ற முயன்று மாற்றியும்விட்டனர். இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான திவ்யா தனது தாயுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் கவலை அடைந்தோம். ஆனால் என் மகனோ கவலைப்படாதீர்கள் பிரச்சனை சுமூகமாக தீரும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவன் ஏடிஎம்மில் ரூ.9,000 பணம் எடுத்துள்ளான். எனது செல்போனில் மெசேஜ் வந்தது. அவனிடம் கேட்டதற்கு நான் தான் அப்பா பணம் எடுத்தேன் என்று கூறினான். இந்நிலையில் பிற்பகல் 2.30 மணிக்கு ரயில் நிலையம் அருகே ஒரு சடலம் கிடக்கிறது அது இளவரசனுடையதாக இருக்கலாம், நீங்கள் வந்து அடையாளம் காட்டுங்கள் என்று ஒரு போலீஸ்காரர் என்னிடம் வந்து கூறினார். இதையடுத்து நான் இந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது இங்கு பிணமாக கிடந்தது என் மகன் தான் என்பது தெரிய வந்தது.
அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறுவதை என்னால் நம்பவே முடியவில்லை. யாரோ அவனை கொன்று ரயில் தண்டவாளம் அருகே போட்டுவிட்டு நாடகமாடுகிறார்கள் என்றார்.
அவர் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது புகார் கூறினார்.
Thatstamil
"இளவரசனின் மரணம் அதிர்ச்சி தருகிறது!.. நீதி விசாரணை வேண்டும்: வைகோ கோரிக்கை "
தருமபுரி: தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞனான இளவரசன் இரயில்வே பாதைக்கு அருகில் உயிரற்ற சடலமாக கிடந்தார் என்ற செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியைத் தருகிறது. அவரது மரணத்திற்கு தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வாலிப மனங்களில் காதல் உணர்வுகள் மலர்வதும், ஒரு இளைஞனும் இளநங்கையும், ஒருவரையொருவர் நேசிப்பதும், திருமண வாழ்வை அமைத்துக் கொள்வதும், மனிதகுல வாழ்க்கைக்கு எழில் கூட்டும் நிலைப்பாடு ஆகும்.
சாதி, மதம், மொழி, நாடுகளின் எல்லைகளைக் கடந்து, இளம் உள்ளங்கள் காதலிப்பதும் இணைவதும், உலகம் முழுவதும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றன. உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட, காலத்தை வென்ற காவியங்கள் பலவும், காதலை மையமாகக் கொண்டு எழுந்தவையே. பெற்றோர் உற்றார் தடுத்ததால், அவர்கள் வாழ்ந்த சமூகங்களில் ஏற்பட்ட அடக்குமுறைகளால், தாங்கள் விரும்பிய காதல் வாழ்வைத் தொடர முடியாமல், காதலர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட துன்பியல் நிகழ்வுகளைப் பிரதிபலித்த இலக்கியங்களே, அமர காவியங்கள் ஆகின.
இதோ, தருமபுரி மாவட்டத்தில், இரண்டு இளம் உள்ளங்கள், இளவரசனும் திவ்யாவும் காதலித்து, முறையாக வாழ்வதற்காகத் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், நடக்கக்கூடாத மோதல்களும், தாக்குதல்களும் நடைபெற்று, ஒற்றுமையாக வாழ வேண்டிய தலித் மக்களும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களும், பகைமையும், வெறுப்பும் கொள்ளும் விபரீதம் நேர்ந்தது.
இந்தப் புறச் சூழ்நிலை காரணமாகவே, ‘நான் என் தாயாரோடு சேர்ந்து வாழப் போகிறேன்' என்று திவ்யா கூறும் நிலை ஏற்பட்டது; இந்நிலையில் இளவரசன் இரயில்வே பாதைக்கு அருகே இறந்து கிடக்கிறார். அவர் இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி கூறப்பட்டாலும், இளவரசனின் பெற்றோர் உறவினர்கள், அவர் தைரியமாகவும், நம்பிக்கையுடன்தான் சம்பவந்தன்று காலை இயங்கினார் என்றும், எனவே அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே, இளவரசன் மரணம் குறித்து நடந்த உண்மையை கண்டறிய தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
உள்ளம் உடைந்த நிலையில் உள்ள திவ்யாவை என்னுகையில் துக்கம் மேடுகிறது. அந்த இளம் தளிரையையும் பாதுகாக்க தக்க சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும்.
இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய, அழகும், இளமையும் மிக்க இந்த வாலிபன், ரயில் பாதையில், உயிர் அற்ற சடலமாகக் கிடந்ததை அறிந்து, தாங்க முடியாத அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் ஆளானேன். இளம் வயதிலேயே கருகி அழிந்து போன இளவரசனைப் பறிகொடுத்து, கண்ணீரில் துடிதுடிக்கும் பெற்றோருக்கும், உற்ற உறவுகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Thatstamil
இளவரசன் மரணத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை - சொல்கிறார் அன்புமணி
சென்னை: இளவரசன் - திவ்யா விவகாரம் இருவரின் தனிப்பட்ட பிரச்சினையாகும். அதில் யாரும் தலையிட வேண்டாம் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். இந்த விவகாரத்துக்கும் பாமகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பேசியுள்ளார் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இதுகுறித்து அன்புமணி கூறுகையில், இளவரசன் மரணம் மிகுந்த வேதனை அளித்தது. உயிரிழப்பு தொடர்பாக மிகவும் வருந்துகிறோம்.
இளவரசன் - திவ்யா பிரச்சனை இருவரின் தனிப்பட்ட பிரச்னையாகும். இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். இந்த விவகாரத்துக்கும் பாமகவுக்கு எந்த தொடர்பும் இல்லை.
இளவரசன் மரணம் கொலையா, தற்கொலையா என்பதை காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் அன்புமணி.
திவ்யா விவகாரத்தில் பாமகவுக்குத் தொடர்பு இல்லை என்று கூறுகிறார் அன்புமணி. ஆனால் திவ்யாவுக்காக ஆஜரான வக்கீல் கே.பாலு, பாமகவுடன் தொடர்புடையவர் என்பதை அன்புமணி மறந்து விட்டாரோ...
Thatstamil
இதற்குத்தான் இத்தனை மோதலா... பாதியிலேயே முடிந்து போன இளவரசனின் போராட்டம்
சென்னை: தமிழகத்தின் அத்தனை மனங்களையும் நேற்று வெகுவாக பாதித்த விஷயம் இளவரசனின் திடீர் மரணம்தான். முதலில் தற்கொலை என்று செய்திகள் வந்தன.. ஆனால் பின்னர் இது கொலையாக இருக்கலாமோ என்ற சந்தேகங்கள் கிளம்பவே இளவரசனின் மரணச் செய்தி தமிழக மக்களை நேற்று உலுக்கி விட்டது.
ஆழமாக காதலித்து, அதற்காக உற்றார் உறவுகளைக் கூட துறந்தும், ஊரே பற்றி எரிந்தபோதும் பயப்படாமல், துணிகரமாக செயல்பட முடிந்த திவ்யாவும், இளவரசனும், தங்களது காதலைக் காப்பாற்றி வாழ வைக்க முடியாமல் பாதியிலேயே இப்படி சிதைந்து போயிருப்பது பலரையும் வருத்தமுற வைத்துள்ளது.
நீ வேண்டாம் என்று திவ்யா தனது தாயுடன் கிளம்பிச் செல்ல அடுத்த 24 மணி நேரத்தில் இளவரசன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

அழகாக பூத்த நேசம்
திவ்யாவுக்கு வயது 20 ஆகிறது. இளவரசனுக்கு 23 வயது. சாதித் திரையால் தங்களது கண்களைக் கட்டிக் கொள்ளாமல், இதயத் திரையைத் திறந்து இருவரும் ஆழமாக நேசிக்க ஆரம்பித்தனர்... பூத்தது அழகான காதல்.
கல்லூரிச் சாலையில் பூத்த காதல்
இளவரசன் தர்மபுரி கல்லூரியில் படித்து வந்தார். திவ்யா, நர்சிங் கல்லூரியில் படித்தார். இளவரசனின் ஊர் நத்தம் காலனி. திவ்யாவின் ஊர் செல்லங்கொட்டாய். இருவரும் கல்லூரிக்குப் போகும் வழியில் சந்தித்துப் பேசி காதலை வளர்த்து வந்தனர்.
கிளம்பிய எதிர்ப்புகள்
இந்த நிலையில் இருவரது குடும்பத்துக்கும் இவர்களது காதல் தெரிய வந்தது. அவ்வளவுதான்.. திவ்யாவின் குடும்பத்தினர் பொங்கி எழுந்து விட்டனர். வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தனர்.
2012, அக்டோபர் 10ம் தேதி கல்யாணம்
கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
நத்தனம் காலனியில் குடித்தனம்
திருமணத்திற்குப் பின்னர் சேலம் சரக டிஐஜியிடம் தஞ்சமடைந்து பாதுகாப்பு கோரினர். பின்னர் நத்தம் காலனிக்குப் புறப்பட்டனர். அங்கு இளவரசன் குடும்பம் திவ்யாவை அன்புடன் வரவேற்றது. இருவரும் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தனர்.
ஓடி வந்த தாய்
திவ்யா நத்தம் காலனியில் இருப்பதை அறிந்த அவரது தாயார் தேன்மொழி அங்கு விரைந்து சென்றார். மகளை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் திவ்யா வர மறுத்து விட்டார்.
தந்தையின் திடீர் தற்கொலை
இந்த நிலையில் நவம்பர் 7ம் தேதி திவ்யாவின் தந்தை நாகராஜ் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
வெடித்தது கலவரம்
நாகராஜ் தற்கொலையால் அவரது சமூகத்தினர் கொதித்தெழுந்தனர். நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்குள் புகுந்து கொலை வெறியாட்டம் ஆடி வி்ட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகளைச் சூறையாடி விட்டனர். பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. நாடே பதறிப் போய்ப் பார்த்தது இந்த சாதி வெறி வன்முறையை.
நான் மேஜர்.. விரும்பித்தான் இளவரசனுடன் சென்றேன்
இந்த நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி தர்மபுரி கோர்ட்டில் ஒரு மனு செய்தார். அதில் தனது மகளைக் கடத்தி விட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜரான திவ்யா, நான் மேஜர், நானாக விரும்பித்தான் இளவரசனை திருமணம் செய்து கொண்டேன் என்று வாக்குமூ்லம் அளித்தார்.
பெங்களூர் விரைந்தனர்
இந்த சமயத்தில்தான் அரசியல் குறுக்கீடுகள் ஆழமாக கிளம்ப ஆரம்பித்தன. நிச்சயம் நம்மை இந்த சாதி வெறி அரசியல்வாதிகள் வாழ விட மாட்டார்கள் என்பதை உணர்ந்த திவ்யாவும், இளவரசனும் பெங்களூருக்குப் புறப்பட்டுப் போய் விட்டனர்.
தர்மபுரி திரும்பினர்
அதன் பின்னர் மீண்டும் தர்மபுரி திரும்பிய அவர்கள் அங்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்த இளவரசனின் தந்தையுடன் தங்கினர்.
நாடோடி வாழ்க்கை
இப்படி அங்குமிங்குமாக அரசியல் கொலை வெறியர்களுக்குப் பயந்து ஓடிக் கொண்டே இருந்தனர் இளவரசனும், திவ்யாவும்.
எமனாக வந்த ஹேபியஸ் கார்பஸ்
இந்த நிலையில்தான் தேன்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டார். அதுதான் இன்று இளவரசனின் மரணம் வரை வந்து முடிந்திருக்கிறது.
விரும்பித்தான் போனேன்.... மீண்டும் வலியுறுத்திய திவ்யா
இந்த வழக்கு மார்ச் 27ம் தேதி விசாரணைக்கு வந்தபோது திவ்யா கோர்ட்டில் ஆஜர்பபடுத்தப்பட்டார். அப்போது தான் விரும்பியே இளவரசனுடன் போனதாக அவர் கூறினார்.
கடந்த மாதம் தடம் புரண்ட திவ்யா
ஆனால் கடந்த மாதம் வழக்கு மீண்டும் கோர்ட்டுக்கு வந்தபோது தடம் மாறிப் போயிருந்தார். தற்போது நடந்த சம்பவங்களால் எனது மனம் மிகவும் குழம்பி போய் உள்ளது. எனவே, நான் தகுந்த முடிவு எடுக்கும்வரை எனது தாயுடன் இருக்க விரும்புகிறேன். இளவரசனுடன் பேச விரும்பவில்லை என்று கூறி விட்டு தாயாருடன் கிளம்பிப் போய் விட்டார்.
ஜூலை 1ல் மீண்டும் மாற்றம்
ஜூலை 1ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனது தாயாரின் முடிவுக்கேற்ப வாழ்வேன். அவர் எனது காதல் திருமணத்தை அங்கீகரித்தால் இளவரசனுடன் சேர்ந்து வாழத் தயார் என்று கூறினார்.
வழக்கை திரும்பப் பெற்ற தேன்மொழி
இந்த நிலையில் ஜூலை 3ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை திரும்பப் பெறுவதாக தேன்மொழி தெரிவித்தார்.
மீண்டும் சேரவே மாட்டேன்.. திவ்யாவின் திடீர் அறிவிப்பு
அன்று செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா, இளவரசனுடன் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டேன். கடைசி வரை எனது தாயாருடன்தான் இருப்பேன் என்று கூறியதைக் கேட்டு இளவரசன் தரப்பு பெரும் அதிர்ச்சியாகிப் போனது.
24 மணி நேரத்தில் மரணம்
இதையடுத்து நேற்று காலை இளவரசன் பிணமாகி தண்டவாளத்தில் கிடந்தார்....
அழகாக பூத்த காதல், போராட்டங்களைப் பார்த்த காதல்.. கடைசியில் யாருக்குமே புண்ணியம் இல்லாமல் இப்படி பாதியிலேயே கருகிப் போய் விட்டது. தாயும், மகளும் இனி என்ன செய்யப் போகிறார்கள்....??
thatstamil
"அம்மா முடிவுப்படி வாழ்வேன்.. 'காதல்' இளவரசன் வேண்டாம்.. தர்மபுரி திவ்யா"
சென்னை: பாமகவின் தலையீடு எப்போது புகுந்ததோ அன்று முதலே தனது காதல் திருமணம் தொடர்பாக தொடர்ந்து குழப்பமாகவே பேசி வந்த தர்மபுரி இளம் பெண் திவ்யா, தற்போது தான் காதலித்து, ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து வாழ்ந்து வந்த கணவர் இளவரசனுடன் இனிமேல் வாழ மாட்டேன். எனது தாயாரின் விருப்பப்படியே வாழ்வேன் என்று அறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச்சேர்ந்தவர் தேன்மொழி. இவரது மகள்தான் திவ்யா.இவரு்ம், இளவரசனும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். ஊரை விட்டும் ஓடினர். இதுகுறித்து போலீஸில் திவ்யாவின் தந்தை புகார் கொடுத்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தலித் மக்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.
3 கிராமங்களை வன்னிய சமுதாயத்தினர் சூறையாடி பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேன்மொழி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செயய்பட்டது. அதில், தனது மகளை இளவரசன் கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்து விட்டதாகவும், இப்போது திவ்யா என்னைத் தொடர்பு கொண்டு இளவரசன் தன்னை மிரட்டுவதாகவம், அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தார். எனவே எனது மகளை மீட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஸ்திரமற்ற பேச்சு
இதையடுத்து மார்ச்27ம் தேதி உயர்நீதிமன்றத்தில் திவ்யா ஆஜரானார். அப்போது நானாக விரும்பித்தான் சென்றேன். என்னை யாரும் துன்புறுத்தவில்லை என்று அவர் கூறினார். பின்னர் மீ்ண்டும் விசாரணைக்கு வழக்கு வந்தபோது பாமகவைச் சேர்ந்த வக்கீல் பாலு உள்ளிட்டோர் புடை சூழ கோர்ட்டுக்கு வந்தார் திவ்யா. அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டது. நீதிபதிகளிடம், சமீபத்தில் நடந்த சம்பவங்களால் எனது மனம் மிகவும் குழம்பிப்போய் உள்ளது. எனவே, தகுந்த முடிவு எடுப்பதற்கு முன்பு எனது தாயாருடன் தங்க விரும்புகிறேன். இளவரசனுடன் இப்போது பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
நேற்று புதுப் பேச்சு
பின்னர் ஜூலை 1ம் தேதி வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது எனது தாயார் என் காதல் திருமணத்தை அங்கீகரித்தால், இளவரசனுடன் சேர்ந்து வாழ்வேன் என்று கூறினார் திவ்யா. இதையடுத்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யாவின் நிலையில் மேலும் மாற்றம் காணப்பட்டது. மேலும், தேன்மொழி தரப்பில் ஆஜரான வக்கீல் ரூபர்ட் பர்ணபாஸ், கே.பாலு ஆகியோர் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிபதிகளிடம் தெரிவித்தனர். இதுகுறித்த தீர்ப்பை நாளை வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். பின்னர் வெளியே வந்த திவ்யா பரபரப்பாக பேசினார்..
விரும்பித்தான் மணந்தேன்
இளவரசனை விரும்பித்தான் திருமணம் செய்தேன். அதன் பின்னர் அப்பா இறந்துவிட்டார். ஊரிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அதனால் அந்த கஷ்டங்களும், அப்பாவின் இழப்பு மட்டும்தான் என் நினைவில் இருந்தன.
சேர்ந்து வாழ முடியவில்லை
அதனால் அவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. வேறு எந்த ஆசையும், எண்ணமும் அவர் மீது தோன்றவில்லை.
அப்பாவின் நினைவு மட்டுமே
எனக்கு அப்பாவின் நினைவு மட்டும்தான் உள்ளது. அன்றிருந்த சூழ்நிலையில் என்னால் அங்கிருந்து மீறி உடனே வர முடியவில்லை. எனவேதான் இவ்வளவு நாட்களை நான் எடுத்துக்கொண்டேன். இப்போது நான் வந்துவிட்டேன்.
அப்பா இடத்தில் இனி நான் இருப்பேன்
இளவரசன் வேண்டாம் என்று அப்பா கூறியிருந்த நிலையில், இனிமேல் எந்த சூழ்நிலையிலும் அவருடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. அம்மாவுடன் இருந்து எனது அப்பாவின் இடத்தை என்னால் முடிந்தவரை ஈடு செய்வேன். அம்மாவும் வேண்டும், அவரும் வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்தேன்.
சேர்ந்து வாழத் தயாராக இல்லை
ஆனால் எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை. நான் எப்போது என்றாலும் சேர்ந்து வாழ தயாராக இல்லை. அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன்.
இளவரசனுடன் வாழ்வேன் எனக் கூறவில்லை
ஆனால், இளவசரனுடன் வாழத்தயார் என்று நீதிபதிகளிடம் நான் கூறியதாக எதிர்த்தரப்பினர் தவறான தகவலை வெளியிட்டுவிட்டனர். நான் எனது தாயார், உறவினர்களின் ஆதரவை பெறுவதற்காக, நான் செய்தது தவறு என்று கூறியிருந்த நிலையில், இப்படி ஒரு தவறான தகவலை கொடுத்துவிட்டனர். இதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன் என்றார் திவ்யா.
திவ்யாவின் இந்தப் புதுப் பேச்சால் இளவரசன் தரப்பு பெரும் வருத்தமடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக