அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 30 ஜூலை, 2013

ஸ்லைட் பிரசண்டேஷனில் தொடர்ந்து இசை கிடைக்க

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ஷோவின் போது மிக அருமையாகத் தயாரிக்கப்பட்ட ஸ்லைட் ஒன்றைக் காட்டி விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பின்னணியில் மெல்லிய இசை இசைக்கப்படும் வேண்டும் என்பதற்காக சவுண்ட் பைல் ஒன்றை இயங்குமாறு செய்திருக்கிறீர்கள்.

இந்த சவுண்ட் பைல் நீங்கள் குறிப்பிட்ட விநாடிகள் வரை இயங்கி நின்று விடும். ஆனால் உங்கள் பிரசன்டேஷனைப் பார்ப்பவர்கள் அதிக சந்தேகங்களை எழுப்பி உங்களிடமிருந்து தகவல்களைப் பெற முயற்சிக்கையில் நீங்கள் பேசுவீர்கள். பின்னணி இசை கிடைக்காது. எனவே சவுண்ட் பைல் இயங்குவதை ஒரு லூப்பில் அதாவது நீங்களாக நிறுத்தும் வரை ஒரு வளையத்தில் இயங்கு வண்ணம் அமைக்கலாம். அதற்கு கீழ்க்கண்ட முறையில் செட் செய்திடவும்.

சவுண்ட் பைலை ஒரு ஆப்ஜெக்டாக அமைத்திருக்கையில் ஒரு ஸ்பீக்கர் ஐகான் ஒன்று ஸ்லைடில் தெரியும்.

இதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Edit Sound Object” என்ற பிரிவு தெரியும்.

இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள “Loop until stopped” என்ற பிரிவில் செக் செய்திடவும்.

பின் ஓகே கிளிக் செய்து மூடவும். இனி அடுத்த ஸ்லைட் செல்லும் வரை, பிரசன்டேஷன் முடியும் வரை அல்லது நீங்களாக நிறுத்தும்வரை இசை தொடர்ந்து ரம்மியமாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக