அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 28 ஜூலை, 2013

பெருங்காயம்

ஒரு மரத்தினுடைய பிசினிலிருந்து வரும் பாலில் செய்யக் கூடியது. ஆங்கிலப் பெயர் பெரூலா அசபோய் டிடா (ferula asafoetida). இதை மருந்திற்குப் பயன்படுத்துவார்கள். பொதுவாக ஒரு குறள் உண்டு.

மாறுபாடு இல்லாத உண்டி

மருந்துண்ணின் ஊறுபாடு

இல்லை உயிர்க்கு

என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

ஒரு பொருளோடு இன்னொரு பொருள் சேரும் போது எதிரான பொருளைச் சேர்க்கும் போது வயிற்றிலே சென்று சண்டை போடக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஒற்றுமை ஏற்படாது. நோயை உண்டாக்கக் கூடியது.


(Food Poison)

பலாப்பழத்துடன் சுக்கு சேர்த்து சாப் பிட்டால் உணவு விஷமாக மாறுகின்றது. தேனும், நெய்யும் சேர்த்து சாப்பிடக் கூடாது. தயிரும், கீரையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. வயிற்றிற்கு மந்தத்தைக் கொடுக்கும். மாறுபாடான உணவை உண்ணின் நோய் என்பதே வராது.

தப்பித் தவறி மாறுபாடான உணவை உண்டு விட்டோமானால் ஏற்படும் வயிறு உப்பிசத்தை மாற்றக்கூடியது பெருங்காயம். அமிலத் தன்மையை போக்கக் கூடியது. புண்களை ஆற்றக்கூடி யது. இப்படி பெருங்காயம் ஒரு மா மருந்தாக பயன்படுகின்றது.

காயம் என்பது உடல். உடலிற் குத் அனைத்து சுகத்தையும் தரக் கூடியது என்பதால் பெருங்காயம் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

பெருங்காயத் தைலம்

பெருங்காயத்தை தூளாக்கி எடுக்க வும். நல்லெண்ணெய் சிறிதளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் வைத்து தூளாக்கிய பெருங்காயத்தைப் போட்டு கொதிக்க விடவும். அதன் சாறு நன்றாக இறங்கும் வரை கொதிக்க விட்டு இறக்கி ஆற விட்டு வடிகட்டி எடுக்கவும்.

40-–60% பிசுபிசுப்புத் தன்மை உள்ளது. காக்கை வலிப்புக்கும் பயன்படுகின்றது.

தினமும் பெருங்காயத்தை கொடுத் தால் நல்லது. கை,கால்களை இழுத்து கொண்டு வருவதை கால், கை வலிப்பு என்று சொல்வார்கள். தமிழிலே சொல் லும் போது காக்கை வலிப்பு என்பார் கள். காக்கை என்பது ஒரு பறவை யின் பெயர். அதனுடையபெயரால் சொல்வார்கள்.

ஆனால் அந்தப் பெயர் கிடையாது.கை யையும், காலையும் வெடுக்கு வெடு க்கென இழுத்துக் கொண்டு வாயில் நுரை தள்ளுகின்ற நிலையில் இந்தப் பெருங்காயத்தை தினமும் கொடுக் கின்ற போது அது ஒரு மா மருந்தாக அமைகின்றது.

இந்த பெருங்காயத் தைலம் காது நோய்க்கு நல்ல மருந்தாகும். ஒருசில துளி விட்டு வந்தால் நீண்ட நாட்பட்ட காது வலி, இரைச்சல், சீழ் வடி தல் போன்றவை விரைவில் குணமாகும்.

பெருங்காயத் தேநீர்

அடுப்பில் பாத்திரமொன்றில் தண் ணீர் விட்டு கொதிக்க வைத்து ஒரு தேக் கரண்டி பெருங்காயத் தூளைச் சேர்த்து பனைவெல்லம் ருசிக்கு சேர்த்து சாறு இறங்கும் வரை கொதிக்க விட்டு வடி கட்டி பருகவும். காலை, மாலை குடிக் கும் போது வயிற்றுப் பிரச்சனைகளைப் போக்கும். நரம்புகளுக்கு பலம் கொடுக் கும்.

இருமலுக்கு நல்லது. சுவாச நாளங் களை சுத்தப்படுத்தும். ஆஸ்துமா நோயா ளர்களுக்கு நல்லது. இரவு நேரத்திலே ஆஸ்துமா நோயாளர்கள் பயன்படுத்த லாம்.

ஆஸ்துமா நோயாளிகள் மூச்சை சுலபமாக உள்ளே இழுத்துக் கொள் வார்கள். மூச்சை வெளியே விட கஷ்டப் படுவார்கள். பொதுவாக எழுந்து உட் கார்ந்து கொண்டிருப்பார்கள். அவர்க ளால் படுக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் இந்தப் பெருங்காயத் தேநீர் நல்ல மருந்தாக அமையும்.

பனை வெல்லத்தில் தாது உப்புக்கள் உண்டு. குளிர்மையான தன்மையைக் கொடுக்கும். நடுக்கம் உள்ளவர் கள் இதை 48 நாட்கள் சாப் பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். குழந் தைகள் முதல் பெரிய வர்கள் வரை பயன் படுத்தலாம்.

வீரகேசரி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக