அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 30 ஜூலை, 2013

ப்ளக் இன் (plug in) புரோகிராம் என்றால் என்ன????

ப்ளக் இன் (plug in) என்று அழைக்கப்படுவது ஒரு சிறிய புரோகிராம். இது உங்கள் பிரவுசருடன் இணைந்து செயலாற்றும் வகையில் வடிமைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட சில வகைகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வெப் மீடியாவினை இயக்க இந்த ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படும்.

எடுத்துக்காட்டாக சில வெப் தளங்கள் நீங்கள் கேம்ஸ் விளையாட ஷாக்வேவ் தரும் வசதியினைப் பயன்படுத்துகின்றன. எனவே நீங்கள் இந்த கேம்ஸ் விளையாட வேண்டும் என்றால் ஷாக் வேவ் ப்ளக் இன் கட்டாயம் தேவை.

அப்படியானால் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டுமா என்று எண்ண வேண்டாம். நீங்கள் குறிப்பிட்ட கேம்ஸ் அல்லது வேறு வகை வெப் மீடியாவினைத் திறக்க எண்ணுகையில் அந்த தளமே உங்கள் கம்ப்யூட்டரைத் தேடிப் பார்த்து இந்த ப்ளக் இன் இல்லை. சற்றுப் பொறுக்கவும்; நானே தேடிப் பதிந்து கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டு அந்த ப்ளக் இன் புரோகிராமினைப் பதிந்துவிடும்.

ஆனால் இப்போது வரும் பெரும்பாலான பிரவுசர்கள் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களையும் உள்ளடக்கியே வருகின்றன. எனவே, இது குறித்து நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக