அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 14 ஆகஸ்ட், 2013

லாரி டிரைவரான 18 -வயது இளம்வயது பெண்!

இங்கிலாந்து நாட்டின் மிக குறைந்த வயதில் லாரி ஓட்டும் உரிமையை 18 வயது இளம்பெண்ணான ஜெஸ் ஸ்டப்ஸ் பெற்றுள்ளார். இவரது சகோதரியான 24 வயது லூசியும் லாரி டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் இளம் வயது பெண் லாரி டிரைவர் ஆனது குறித்து கருத்து கூறிய ஜெஸ் ஸ்டப்ஸ், ‘எனது அப்பா, மாமாக்கள், சகோதரர்கள், சகோதரி எல்லோருமே லாரி டிரைவர்கள் தான்.ஓட்ட பழகி விட்டால் பிறகு இந்த தொழிலை விட்டு விலக மனம் வராது. என்னைப் பொருத்தவரை பல்கலைக்கழகம் சென்று படிக்க வேண்டும் என்பதை விட மனதுக்கு பிடித்ததை செய்வதில் தான் ஆர்வம் அதிகம்.

லாரி துறையை பொருத்தவரை அனேகமாக எல்லா டிரைவர்களுமே ஆண்களாகவே உள்ளனர். தற்போது, பெண்களும் இந்த துறையில் டிரைவர்களாக கால் பதிக்க தொடங்கியுள்ளனர்.இந்த தொழிலில் பிடித்த விஷயம் என்னவென்றால், அடுத்த லோடு எங்கே போக வேண்டும் என்பது தெரியாமலே இருப்பதுதான். நாட்டின் எந்த மூலைக்கு வேண்டும் என்றாலும் போக வேண்டிய சூழ்நிலை வரும். ஒரு நாள், கண்ணைக் கவரும் ரம்மியமான காட்சிகள் நிறைந்த ஸ்காட்லாந்து வழியாக போக வேண்டியிருக்கும். மற்றொரு நாள், தெற்கு கடற்கரை சாலையோரமாக செல்ல வேண்டி வரும். இந்த சவால்களுக்காகவே லாரி டிரைவர் தொழிலை நான் தேர்வு செய்தேன்’ என்று கூறுகிறார், ஜெஸ் ஸ்டப்ஸ்!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக