அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பேரு 'மெட்ராஸ் கபே'... பிரபாகரன் = பாஸ்கரன், தமிழர்கள் கெட்டவர்கள், மலையாள ரா அதிகாரி!!

சென்னை: மலையாளியான இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்து நடித்துள்ள மெட்ராஸ் கபே திரைப்படம் ராஜீவ் காந்தியை நாயகனாகவும், எல்டிடிஇ தலைவர் பிரபாகரனை படுமோசமானவராகவும் சித்தரித்துள்ளதாக படம் பார்த்த தமிழ் அமைப்புகள் கொந்தளித்துள்ளன.

ஜான் ஆபிரகாம் நடித்துள்ள மெட்ராஸ் கபே இந்திப்படம் வருகிற 23ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

விடுதலைப் புலிகளை எதிர்மறையாக சித்தரித்து இதில் காட்சிகள் இருப்பதால் தமிழகத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் எதிர்த்துள்ளன.

இதையடுத்து அந்த அமைப்புகளுக்கு சென்னையில் நேற்று இப்படம் பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டது. பல்வேறு தமிழ் அமைப்புகள், கட்சித் தலைவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வந்தனர். படத்தை பார்த்த சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் படத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ராஜீவ் காந்தியை கதாநாயகனாகவும், பிரபாகரனை வில்லனாகவும் சித்தரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், இந்தப் படம் தமிழருக்கு விரோதமானது என்றனர்.

பிரபாகரன் = பாஸ்கரன்:

இதில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பாஸ்கரன் என்ற பெயரில் சித்தரித்து உள்ளனர். அந்த வேடத்தில் தமிழ் நடிகர் அஜய் ரத்னம் நடித்துள்ளார்.

மலையாள ரா அதிகாரி:

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் சண்டை தீவிரமாகிறது. அங்கு அமைதி ஏற்படுத்த இந்தியா அமைதிப்படை அனுப்பி வைக்கிறது. மலையாள 'ரா' அதிகாரி ஜான் ஆபிரகாம் கேரளாவில் இருந்து அங்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

தமிழர்கள் கெட்டவர்கள்:

இதில் தமிழருக்கு எதிராக சிங்கள ராணுவம் செய்த கொடுமைகள், படுகொலைகள் எதுவும் காட்டப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளையும், ஈழத் தமிழர்களையும் வில்லன்களாகவும், கேரளாவை சேர்ந்தவர்களை நல்லவர்களாகவும் சித்தரித்து படம் எடுத்துள்ளனர் என்றும் படம் பார்த்த ஆர்.கே.செல்வமணி குற்றம் சாட்டினார்.

"இந்தப் படம் மிகவும் தப்பான படம். இப்படி தப்பான ஒன்றை எடுத்துவிட்டு, அதற்கு மெட்ராஸ் கபே என்ற பெயரையும் வைத்து தமிழன் வரலாற்றை தப்பாகச் சித்தரிக்கும் ஒரு படத்தை அனுமதிப்பது எத்தனை பெரிய அபத்தம்... இந்தப் படம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் எங்குமே வெளியாகக் கூடாது," என்றார் இயக்குநர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.


Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக