அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்

விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது.

மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள.

ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை.

1மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது.

ஆன் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில் இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே அதன் உள்ளே சென்று கருவாகிறது.

குழந்தை ஆனா, பெண்ணா என்பதை தீர்மானிக்க ஆண் உயிரணுவே காரணமாகிறது.

குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்களே காரணமாக இருக்கிறான்.


சுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்?

பரம்பரை வைத்தியர்கள் கூறுவது போலச் சக்தி ஒன்றும் வெளியேறவில்லை! விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமான சத்தே தவிர இதனால் உடலுக்கு சக்தி இழப்பு என்று எதுவும் கிடையாது.

சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்புக்கு காரணம் என்னவென்றால், பாலுணர்வு என்பது குறிமலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித இன்பப்பரப்புதான். அப்பொழுது இரத்தஓட்டம் அதிகமாகி, உடல் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறுகின்றன. விந்து வெளியேறும் பொழுது, ஆண்குறி முனையில் அழுத்தம் ஏற்பட்டு, நரம்புகளில் இன்பத்துடிபபு ஏற்படுகிறது. இதுவே உச்ச இன்பம் என்பதாகும். பிறகு, உடல் சாதாரண நிலைக்கு வருகிறது.

இப்பொழுது ஏற்படும் உடல் தளர்ச்சியும், மன அமைதியும், ஒருவிதக் களைப்பு உணர்வைக் கொடுக்கிறது. தூக்க உணர்வை ஏற்படுத்துகிறது. இதுவரை ஆட்டிப் படைத்த பாலுணர்வுக் கற்பனைகள் தற்காலிகமாக மறைகிறது.

இந்த உடல் சோர்வு, நீங்கள் சாதாரணமாக விளையாடி விட்டு வந்தபிறகு ஏற்படும் உடல் சோர்வு போலத்தான். இதில் ஏற்படும் சக்தி விரயம், விளையாட்டில் ஏற்படும் சக்தி விரயத்தை விட குறைவுதான். ஆனால், பெரும்பாலோர் குற்ற உணர்வினால் மனச்சோர்வு அடைந்து, அதன் மூலமாக உடல் சோர்வை அடைகிறார்கள், அவ்வளவுதான்.

பின்குறிப்பு : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. (புரிந்தால் சரி).
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக