அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

யுத்தத்தின் பின் அமைதியை எதிர்பார்த்த நிலையில் தற்போது நாட்டில் இனத்துவேஷமும், பகையும், வெறுப்பும் அதிகரித்துள்ளது

நாட்டில் யுத்தம் முடி­வ­டைந்­த தன் பின்னர் என்றும் இல்­லாத வகையில் இனக் குரோதச் செயற்­பா­டுகள் ஒரு சிறு குழு­வினால் நாட் டின் எல்லாப் பாகங்­க­ளிலும் பரப்பப்­பட் டுக் கொண்டு வரு­கின்­றன. இனங்­க­ளுக்கு இடையே பகை­மை­களும், அநி­யா­யங்­க ளும் யுத்­தத்தின் பின்னர் குறைந்து விடு­மென்று நாட்டு மக்­களால் மட்­டு­மன்றி, சர்­வ­தேச நாடு­க­ளி­னாலும் எதிர்பார்க்­கப்­பட் ­டன. ஆனால், யுத்­தத்தின் பின்னர் இனத்­து­வே­ஷமும், வெறுப்பும் பகையும், காழ்ப்­பு­ணர்ச்­சியும் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வது வேத­னைக்­கு­ரி­ய­தாகும். இந்த நாட்டை உண்­மை­யாக நேசிக்­கின்ற உள்­ளங்­க­ளுக்கு துன்­ப­மா­ன­தாகும்.

யுத்த முடி­வுக்குப் பின்னர் நாட்­டுப்­பற்று என்­பது பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு அடி­மை ப்­பட்டு, அவர்­களின் திட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­பட்டு நடப்­பது என்­ற­தொரு புதிய சித்­தாந்­தத்தை புத்­தரின் தத்­து­வங்­களை போத­னை­யாகக் கொண்ட ஒரு சில தேரர்­களின் தலை­மை­யி­லான சிங்­க­ள­வர்கள் மக்­க­ளுக்கு கற்­பித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் இப்­பு­திய சித்­தாந்­தத்­திற்கு அர­சாங்­க த்தில் உள்ள பௌத்த கடும்­போக்­கா­ளர்­க ளும் துணை­யாக நின்று கொண்­டி­ருப்­பது அவர்­க­ளுக்கு ஊக்­கு­விப்பு அளிப்­ப­தாக இரு க்­கின்­றது.

தமி­ழர்­களை யுத்­தத்தின் மூல­மாக அடக்­கி­ விட்டோம். அடுத்த­தாக முஸ்­லிம்­களை அட க்க வேண்­டு­மென்ற சிந்­த­னையைக் கொண்­ட­தா­கவே பௌத்த கடும் போக்­கா­ளர்­களின் நட­வ­டிக்­கைகள் அமைந்­துள்­ளன. இன்று முஸ்­லிம்­களின் மத­வி­ழு­மி­யங்­களின் மீதும், பள்­ளி­வா­சல்­களின் மீதும் அடிமேல் அடி விழுந்து கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­க ளும் தொடர்ச்­சி­யாக குனிந்து கொண்டே நிற்­கின்­றார்கள். குட்டக் குட்ட குனி­ப­வ னும் மடையன், குனியக் குனிய குட்­டு­ப­வனும் மடையன் என்று நம் முன்னோர் சொல்­லி­யுள்ள தத்­து­வார்த்­தத்­தினை அவ­தா­னிக்­கின்ற போது, முஸ்­லிம்­களின் மீது இன­வி­ரோதம் காட்­டு­கின்­ற­வர்­களும், அதனை கோழை­க­ளாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்ற முஸ்­லிம்­களின் தலை­மை­களும் எந்த நிலையில் இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தனை நீங்­களே புரிந்து கொண்­டி­ருப்­பீர்கள் என்று நம்­பு­கின்றோம்.

கொழும்பு – கிராண்ட்பாஸ் சுவர்­ண­சைத்­திய வீதியில் அமைந்­துள்ள தீனுல் இஸ் லாம் பள்­ளி­வா­சலில் தொழு­கையை மேற்­கொள்ளக் கூடா­தென்று பௌத்த பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு குழு­வி­னரால் குறிப்­பிட்ட பள்­ளி­வாசல் கடந்த 10.08.2013 சனிக்­கி­ழமை தாக்­கப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டது.

தீனுல் இஸ்லாம் பள்­ளி­வாசல் கடந்த 40 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தொன்­றாகும். இப்­பள்­ளி­வாசல் இங்­குள்ள சுமார் 400 குடும்­பங்­க­ளுக்கு போதா­மை­யாக இருந்­த­தனால் இதனைப் பெரி­தாக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. இதனால், பள்­ளி­வா­சலை பெரி­தாக்க வேண்­டு­மாக இருந் தால் பள்­ளி­வா­ச­லுக்குள் கிளை விட்­டி­ருக் கும் அரச மரத்தை வெட்ட வேண்டும். இதன் நிமித்தம் அரச மரத்தை வெட்­டு­வ­தற்­கான அனு­ம­தியை பள்­ளி­வா­சலின் நிர்­வா­ கிகள் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி டம் பெற்றுக் கொண்­டனர். ஆயினும், அரச மரத்தை வெட்­டு­வ­தற்கு பௌத்­தர்கள் எதி ர்ப்புக் காட்­டி­னார்கள்.

இதனைத் தொடர்ந்து புதிய இடத்தில் தீனுல் இஸ்லாம் பள்­ளி­வா­சலை கட்­டு­ வ­தென்றும், பழைய பள்­ளி­வா­சலில் தொழுகை நடத்­து­வ­தில்லை என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்டு, புதிய பள்­ளி­வாசல் மிகுந்த செலவில் கட்­டப்­பட்­டது. இப்­பு­திய பள்­ளி­வாசல் கடந்த 04.07.2013 வியா­ழக்­கி­ழமை திறக்­கப்­பட்­டது. ஆயினும், இப்­பள்­ளி­வா­சலில் தொழுகை நடத்­தப்­ப­டு­வ­தனை பௌத்த தேரர்­களின் தலை­மை­யி­லான ஒரு குழு­வினர் எதிர்த்­தனர். பள்­ளி­வா­சலை தாக்க முற்­பட்­டனர். இதனை அடுத்து புதிய பள்­ளி­வாசல் மூடப்­பட்டு, பழைய பள்­ளி­வா­சலில் தொழு­கைகள் நடை­பெற்­றன.

குறிப்­பிட்ட புதிய பள்­ளி­வாசல் கடந்த வாரம் அர­சாங்க உயர் மட்­டத்­தி­னரின் அனு­ம­தி­யுடன் திறக்­கப்­பட்­டது. ஆயினும், கடந்த 10.08.2013 மஹ்ரிப் தொழுகை நேரத் தில் பௌத்த, சிங்­க­ள­வர்­க­ளினால் தாக்­கப்­பட்­டது.

இத்­தாக்­குதல் சம்­ப­வத்­துடன் இது வரைக் கும் சுமார் 24 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், பள்­ளி­வா­சல்­களை தாக்­கி­ னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் இது வரைக்கும் எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. இதனை விடவும் மோச­மா­னது இது வரைக்கும் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டமை பற்­றி­ய­தொரு முறைப்­பாட்­டை­யேனும் பொலிஸில் முஸ்­லிம்­க­ளினால் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. அதற்­கான எந்­த­வொரு ஏற்­பாட்­டையும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும், பொறுப்பு மிக்க உல­மாக்­க ளும் மேற்­கொள்­ள­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­ட ­தனை கேள்­வி­யுற்ற அனைத்து முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் ஸ்தலத்­திற்கு விரைந்­தார்கள். கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­டார்கள்.

பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் அமைந்­துள்ள வீடு ஒன்றில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் அமைச்­சர்கள் சிலரும் கலந்து கொண்­டார்கள். புதிய பள்­ளி­வா­ச­லி ல்தான் தொழுகை நடை­பெற வேண்டும். இதனை விட்டுக் கொடுக்க முடி­யா­தென்று தீர்­மா­னித்­தார்கள். இதேபோன்­ற­தொரு முடி­ வினை அமைச்சர் பௌஸியின் வீட்டில் முஸ்லிம் அமைச்­சர்கள் கலந்து கொண்ட கலந்­து­ரை­யா­ட­லிலும் எடுக்­கப்­பட்­டன.

ஆனால், இந்த முடிவில் முஸ்லிம் அமைச்­சர்­க­ளினால் உறு­தி­யாக இருக்க துணிவு இருக்­க­வில்லை. பௌத்த சாசன அமைச்சில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையில் முஸ்லிம் அமைச்­சர்­களும், முக்­கிய உல­மாக்­களும், பௌத்த தேரர்கள் பெரும்­பான்மை இனத்து அமைச்­சர்­களும் கலந்து கொண்­டார்கள். இதன்போது முஸ்­லிம்கள் சார்பில் புதிய பள்­ளி­வா­ச­லில்தான் முஸ்­லிம்கள் தொழு­கையை நடத்த வேண்டும். முறை­யான அனு­ம­தி­யுடன் கட்­டப்­பட்ட பள்­ளி­வாசல் என்று எடுத்துக் கூறிய போதிலும், அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க அதற்கு கடு­மை­யான எதிர்ப்­பினைக் காட்­டினார். இவரின் எதிர்ப்பை சமா­ளிக்க முடி­யாத நிலையில் புதிய பள்­ளி­வா­சலில் தொழு­கையை நிறுத்­து­வ­தென்றும், பழைய பள்­ளி­வா­சலை விஸ்­த­ரிப்­ப­தற்கு அருகில் உள்ள அரச மரத்தை அகற்­று­வ­தென்றும், பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்­புக்கு தற்­போ­தைய காணி போதா­த­தாக இருப்­ப­தனால், பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் உள்ள காணியை பெற்றுக் கொள்­வ­தென்றும் முடி­வுகள் செய்­யப்­பட்­டன.

முஸ்­லிம்­களின் உரி­மை­களை விட்டுக் கொடுப்­பதில் தாராளத் தன்­மையைக் கடை ப் பிடித்துக் கொண்டு வரு­கின்ற முஸ்லிம் அர­சியல், சமூக மற்றும் மதத் தலை­மைகள் தீனுல் இஸ்லாம் பள்­ளி­வாசல் விட­யத்­தி லும் விட்டுக் கொடுப்பை மேற்­கொண்­டார்கள். அவர்­களின் பெரிய மனதைப் பாராட்­டாமல் இருக்க முடி­யாது.

தேவை­யற்ற இன­மோ­தல்கள் ஏற்­ப­டு­வ­தனை தவிர்ப்­ப­தற்கும், அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் பிரச்­சி­னை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் விட்டுக் கொடுப்­பினை செய்­வது இன்­றி­ய­மை­யா­த­தாகும். ஆனால், நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாத அமைப்­புக்­க­ளி­னாலும், கடும் போக்­கா­ளர்­க­ளி­னாலும், மாறி­மாறி ஆட்சி அமைத்துக் கொண்ட அர­சாங்­கங்­க­ளி­னாலும் திட்­ட­மிட்டு நடை­பெற்ற சம்­ப­வங்கள் யாவற்­றிலும் முஸ்­லி ம்­களே விட்டுக் கொடுப்­புக்­களைச் செய்­து ள்­ளார்கள். இந்த விட்டுக் கொடுப்­புக்­களை முஸ்­லிம்­களின் பொறுப்பு வாய்ந்த அனைத்துத் தலை­வர்­களும் பெரு­மை­யாக பேசிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

முஸ்­லிம்­களின் மீது பௌத்த இன­வா­தி­க ளும், கடும் போக்­கா­ளர்­களும் வேண்­டு­மென்று மேற்­கொண்டு வரு­கின்ற அடக்கு முறைகள் அனைத்­துக்கும் முஸ்­லிம்கள் விட்டுக் கொடுப்­புக்­களை செய்து கொண்டு வரு­வ­தா­னது அடி ­மைத்­த­னத்­திற்கு ஒப்­பா­ன­தாகும். விட்டுக் கொடுப்பு என்று வரும் போது இரண்டு தரப்­பி­னரும் விட்டுக் கொடுப்­புடன் செயற்­பட வேண்டும். ஒரு தரப்­பினர் மாத்­திரம் விட்டுக் கொடுப்பை தொடர்ச்­சி­யாக செய்து கொண்­டி­ருப்­பார்­க­ளாயின் இறு­தியில் கோவ­ணத்தையும் விட்டுக் கொடுக்­கு­மாறு கேட்­பார்கள்.

இது­வ­ரைக்கும் 24 பள்­ளி­வா­சல்கள் தாக்­க ப்­பட்­டுள்­ளன என்று நாம் எழுதிக் கொண்­டி­ ருக்கும் வேளையில், கிராண்ட்பாஸ் பள்­ளி­ வா­சலின் விவ­காரம் முற்றுப் பெறாத நிலையில் இருக்­கின்ற குழப்­ப­மான சூழ்­

நி­லையில் அநு­ரா­த­புர மாந­கர சபையின் உத்­த­ர­விற்கு அமை­வாக மல்­வத்து ஓயா லேன் பள்­ளி­வாசல் வியா­ழக்­கி­ழமை (15.08.2013) முற்­றாக அகற்­றப்­பட்­டுள்­ளது. இச்­சம்­ப­வத்­தினை அடுத்து 25 பள்­ளி­வா­சல்கள் பௌத்த இன­வா­தி­க­ளி­னதும், கடும் போக்­கா­ளர்­க­ளி­னதும் தாக்­கு­தல்­க­ளுக்கு உட்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு யுத்­தத்தின் பின்னர் முஸ்­லிம்­களின் மீது பௌத்த இன­வா­தி­களும், கடும் போக்­கா­ளர்­களும் அடாத்துக் கொண்­டி­ரு ப்­ப­தற்­கான பிர­தான காரணம் முஸ்­லிம்­களை தகு­தி­யற்ற தலை­மைகள் வழி­ந­டத்திக் கொண்­டி­ருப்­ப­துதான். முஸ்­லிம்­களின் அர­சியல், சமூக, பொரு­ளா­தார, மதத் தலை­வ ர்­களை எடுத்துக் கொண்டால் ஆட்­சி­யா­ளர்­களை திருப்­திப்­ப­டுத்­து­வதில் இன்பம் கண்டு கொண்­டி­ருக்­கின்­றார்கள். பௌத்த இன­வா­தி­களின் செயற்­பா­டு­களை வெற்றி கொள்­வ­தற்கு ஒற்­று­மை­யுடன் செயற்­ப­டு­வ­தற்கு பதி­லாக அர­சியல் கட்­சிகள் என்றும், மத அமைப்­புக்கள் என்றும் தங்­க­ளுக்குள் போட்­டி­யிட்டுக் கொண்டு பிரி­வி­னையை வளர்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்டபோது, பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் பன்றி அறுக்­கப்­பட்ட போது, முஸ்லிம் பெண்­களின் புர்கா விட­யத்தில் தலை­யீ­டுகள் ஏற்­பட்ட போது, முஸ்­லிம்கள் உணவை மற்­ற­வர்­க­ளுக்கு வழங்கும் போது துப்­பி­விட்­டுத்தான் வழங்­கு­கின்­றார் கள் என்று சொல்­லிய போது முஸ்­லிம்­களின் எந்தத் தலை­வரும் அதற்கு எதி­ராக காத்­தி­ர­மான குரல் கொடுக்­க­வில்லை. தமது எதிர்ப்­புக்­களை காட்­ட­வில்லை. அநி­யா­யத்­திற்கு அஞ்சி, ஒடுங்கி முஸ்­லிம்­களைப் பார்த்துப் பொறு­மை­யாக இருக்கும் படி அறிக்­கை­களை விடுத்துக் கொண்டு முஸ்­லிம்­களின் உரி­மை­களை தாரை வார்த்துக் கொடுத்­ததனை எதிர்­கால முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மன்­னிக்­காது. கோழை­க­ளுக்கு அல்­லாஹ்வின் உத­வியும் கிடைக்­காது.

முஸ்­லிம்கள் தமக்கு எதி­ராக பௌத்த இன­வா­தி­க­ளி­னாலும், கடும்­போக்­கா­ளர்­க­ளி­னாலும் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­படும் போதும் தமது எதிர்ப்பைக் காட்ட வேண்­டு­மென்று நாம் கூறும் போதும், முஸ்லிம் சமூ­கத்தை வீதிக்கு இறக்கி ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மென்று எவரும் புரிந்து கொள்ளக் கூடாது. தலை­வர்கள் தங்­களின் கண்­ட­னங்­களை துணிச்­ச­லுடன் காட் ­டுதல், அதற்கு சரி­யான தீர்வு கிடைக்­காத போது, அர­சியல் ரீதி­யான அழுத்­தங்­களை மேற்­கொள்­ளுதல், பிரச்­சி­னை­களை சர்­வ­தேச மயப்­ப­டுத்­துதல் போன்ற காரி­யங்­களில் தலை­வர்கள் ஈடு­ப­டு­கின்ற போது அதனால், சாத­க­மான பலன் நிச்­ச­ய­மாகக் கிடைக்கும். இத்­த­கைய எதிர்ப்­புக்­க­ளையே காட்­டுதல் வேண்டும்.

எங்கு தலை­வர்கள் தங்­க­ளது சமூகப் பொறுப்­புக்­களை மறந்து பொருள் தேடு­வ­ தற்கும், மற்­ற­வர்­க­ளிடம் இருந்து வெறு­ம­னே கண்­ணி­யத்­தையும் எதிர்பார்த்துக் கொண்டு செயற்­ப­டு­வார்­களோ அந்த தலை­வர்­க­ளினால் சமூ­கத்தின் சீர­ழிவை தடுத்து நிறுத்த முடி­யாது. ஆதலால், முஸ்­லிம்­களின் தலை­மைகள் தங்­களின் பொறுப்­புக்­களை உணர்ந்து செயற்­பட வேண்டும். தவறும் பட் ­சத்தில் முஸ்­லிம்கள் தங்­க­ளுக்கு பொருத்­த­மான தலை­வர்­களை தேடிக் கொள்­ளுதல் வேண்டும். இலங்கை முஸ்­லிம்­களின் தலை­வர்­கள்தான் தூங்கிக் கொண்­டி­ருக்­கின்­றா ர்கள் என்றால் சமூ­கமும் தூங்கிக் கொண்­டி­ருப்­ப­துதான் முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கின்ற மிகப் பெரிய ஆபத்­தாகும்.இதேவேளை, கிராண்ட்பாஸ் பள்­ளி­ வாசல் விட­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள உறுதி மொழிகள் நிறை­வேற்­றப்­ப­டுமா என்ற சந்­தேகம் சாதா­ரண முஸ் லிம்­க­ளிடம் ஏற்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­ச­லு க்கு அருகில் உள்ள அரச மரத்தை வெட்­டு­வ­ தற்கு பூரண விருப்பம் தெரி­விக்­கப்­பட்­டா லும், இப்­பத்தி எழுதும் வரைக்கும் அரச மரத்தின் கிளைகள் வெட்­டப்­பட்­டுள்ள போதிலும், அரச மரம் இன்­னமும் முழு­மை­யாக அகற்­றப்­ப­ட­வில்லை. குறிப்­பிட்ட அரச மரத்தை முழு­மை­யாக அகற்­று­வ­தனை அங்­குள்ள சில பௌத்­தர்கள் விரும்­ப­வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

சஹாப்தீன் -
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக