அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சிறுவர் போராளி அணித்தலைவி மீண்டும் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறுவர் போராளிகள் அணியை பயிற்றுவித்த ரஞ்சனி, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு உளவுப் பிரிவினரால் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சனியால் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தின்படி பதினோராவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி தனது வயதையொத்த சிறுமிகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகவும் பின்னர் துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளின் பின் லெப்டினன் கேணலாக இயக்கத்தில் பதவி உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற யுத்தத்திலும் இவர் பங்குபற்றியுள்ளார். அக்பர் என்றழைக்கப்பட்ட அவருடைய கணவர், புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக இருந்தார். 2006இல் நடைபெற்ற யுத்தத்தில் அவர் உயிரிழந்துவிட்டார்.

மூன்று பிள்ளைகளின் தாயான 34 வயதுடைய ரஞ்சனி, 47பேரட அடங்கிய குழுவில் ஒருவராக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி அங்கே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின் வெளியேறி 2011இல் மெல்பர்ன் நகரில் மீண்டும் திருமணம் செய்து கர்ப்பமாக இருந்த வேளையில் மீண்டும் தடுப்புக் காவலுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக அந்த இயக்கத்தில் தீவிர பற்றுடையவராக இருந்ததால் அகதியாகவே தொடர்ந்தும் பார்க்கப்படுகிறார். உயர்நீதிமன்றில் தன்னை தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்குமாறு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக