அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

வேர்ட் 2007/2010ல் லைன் ஸ்பேஸிங்

நீங்கள் எம்.எஸ்.வேர்ட் 2007 அல்லது 2010க்கு அண்மையில் மாறி இருந்தால், அதன் வரிகளுக்கு இடையேயான இடைவெளியில் சற்று மாற்றம் இருப்பதனை உணர்ந்திருப்பீர்கள். மாறா நிலையில், வரிகளுக்கு இடையே, வேர்ட் 2003ல் இருந்ததைக் காட்டிலும் அதிக இடைவெளி இருப்பதனைப் பார்க்கலாம். இதனை எப்படி நம் விருப்பப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.

வேர்ட் 2003ல், மாறா நிலையில் வரிகளுக்கு இடையே இடைவெளி ஒன்று என செட் செய்யப்பட்டிருக்கும். ஆனால், வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010ல், மைக்ரோசாப்ட் இதனை 1.15 ஆக மாற்றி அமைத்துள்ளது. இது பலருக்குப் பிடித்திருக்கலாம். ஏனென்றால், வரிகள் ஒன்றுக்கொன்று இடம் விட்டு அமைந்து பார்ப்பதற்கு நன்றாகக் காட்சி அளிக்கும்.

ஆனால், சிலர் இதனைத் தங்கள் விருப்பப்படி மாற்ற விரும்புவார்கள். நீங்கள் ஒரு டாகுமெண்ட் முழுவதும், வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளியினை மாற்ற விரும்பினால், ஹோம் டேப்பில், Styles குரூப் செல்லவும். பின்னர், Change Styles அடுத்து Change Styles ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர், பாய்ண்ட்டரை Style Sets என்பதில் காட்டப்படும் பல்வேறு ஸ்டைல் நிலைகளைப் பார்க்கலாம்.இதில் காட்டப்படும் Live Preview என்பதனைக் கிளிக் செய்து, நீங்கள் அமைக்க விரும்பும் மாற்றம், எப்படி டெக்ஸ்ட்டை அமைக்கும் என்பதனைப் பார்க்கலாம். இங்கு வரி இடைவெளியை 1.0 என அமைக்கலாம். இதனை மாறா நிலையில் அமைத்திட Change Styles என்பதில் கிளிக் செய்து, அதன் பின் Set as Default என்பதில் கிளிக் செய்திடவும்.

டாகுமெண்ட்டில் குறிப்பிட்ட வரிகளை மற்றும், நீங்கள் விரும்பும் வரி இடைவெளியில் அமைக்க விரும்பினால், மாற்ற விரும்பும் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, ரிப்பனில், பாராகிராப் (Paragraph) குரூப்பில், Line and Paragraph Spacing என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி மெனுவில், நீங்கள் விரும்பும் வரி இடைவெளியினைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தற்கேற்ற வகையில் இடைவெளி அமையும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக