விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், தாம் மட்டும் தனியாக முள்ளிவாய்க்கால் வரை சென்ற காரணத்தை இப்போது வெளியிட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அங்கு பதவிப்பிரமாணம் செய்வதாக இருந்தது. ஆனால், தனி ஆளாக போய் இவர் பதவிப் பிரமாணம் செய்துவிட்டு திரும்பியுள்ளார். மற்றைய 8 பேரும் அந்த திசையில்கூட தலைவை
த்துப் படுக்கவில்லை.
சரி, இவர் மட்டும் ஏன் போனாராம்? விடுதலைப் புலிகள் மீது அவ்வளவு
ஈடுபாடா?
அதெல்லாம் ஏதுமில்லையாம். முள்ளிவாய்க்கால் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டது என்ற விஷயத்தை மற்றையவர்கள் இவருக்கு சொல்லவில்லையாம். பாவம், அதுதான் முள்ளிவாய்க்கால்வரை தனியே விசிட் அடித்துவிட்டு வந்திருப்பதாக கூறியுள்ளார், சிவாஜிலிங்கம்.
“முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்வோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிவசக்தி ஆனந்தன் என்னிடம் சொன்னார். நானும் சம்மதித்து அங்கு சென்றுவிட்டேன். இதற்கிடையில், மன்னார் கத்தோலிக்க பிஷப், முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டாம் என்று சிவசக்தி ஆனந்தனிடம் கூறினாராம். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனராம்.
ஆனால், ட்ரிப் கேன்சல் என்ற விஷயத்தை என்னிடம் யாரும் கூறவில்லை.
இதனால், நான் அங்கே தனியே போய் இறங்கிவிட்டேன். வந்ததுதான் வந்தோம் என்று முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணத்தை செய்துகொண்டு வந்துவிட்டேன்” என்கிறார், சிவாஜிலிங்கம்.
அடடா.. கம்யூனிகேஷன் பெயிலியரா காரணம்?
விடுதலைப் புலிகள்மீது இவருக்கு அளவு கடந்த பிரியம் காரணமாக முள்ளிவாய்க்கால் சென்றார் என்றல்லவா செய்திகள் வெளியாகின!
(இந்த சிவாஜிலிங்கத்தின் கட்சியான டெலோ இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரத்தினத்தை கொன்றதும், விடுதலைப் புலிகள்தான். இவரோடு முள்ளிவாய்க்கால்வரை கூட செல்லவிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் முன்னாள் தலைவர் பத்மநாபாவை மேலே அனுப்பி வைத்ததும், விடுதலைப் புலிகள்தான்)
விறுவிறுப்பு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக