டைப்பிங் டிரிங்ஸ்: சொல் ஒன்றை முழுவதுமாக அழிக்க, டெல் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை ஒவ்வொரு எழுத்தாக அழிக்க வேண்டாம். கர்சரை, அந்த சொல்லை அடுத்து வைத்துக் கொண்டு, கண்ட்ரோல் + பேக் ஸ்பேஸ் கொடுத்தால், ஒரு முறை அழுத்தியவுடனேயே, அந்த சொல் அழிக்கப்படும்.
டைப் செய்திடுகையில், கர்சரை ஸ்பேஸ் பார் தட்டி, ஒவ்வொரு இடமாகக் கொண்டு செல்வது நமக்கு நேரம் எடுக்கும் செயலாக அமையும். முந்தைய சொல்லின் தொடக்கத்திற்கு கர்சரைக் கொண்டு செல்ல, CTRL + Left Arrow பயன்படுத்தலாம். அடுத்த சொல்லின் தொடக்கத்திற்கு கர்சரைக் கொண்டு செல்ல, CTRL + Right Arrow பயன்படுத்தலாம்.
டாகுமெண்ட்டில் சில வேளைகளில் சப் அல்லது சூப்பர் ஸ்கிரிப்ட் அமைக்க வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக exponents அமைக்கையில் சூப்பர் ஸ்கிரிப்ட் அமைத்திடுவோம். இதற்கு சப்ஸ்கிரிப்ட் அமைக்க CTRL + = கீகளையும், சூப்பர் ஸ்கிரிப்ட் அமைக்க CTRL + SHIFT + = கீகளையும் அழுத்துக.
ஏதேனும் இன்னொரு புரோகிராமில் இருந்து டெக்ஸ்ட்டை காப்பி செய்து, பேஸ்ட் செய்கையில், அதன் பார்மட்டிங் கூறுகளும் அதனுடன் சேர்ந்து பேஸ்ட் ஆகும். அப்படி இல்லாமல், வெறும் டெக்ஸ்ட் மட்டுமே பேஸ்ட் ஆக வேண்டும் எனில், டெக்ஸ்ட்டை காப்பி செய்த பின்னர், வெறுமனே கண்ட்ரோல் +வி (CTRL + V) கொடுக் காமல்,கண்ட்ரோல் + ஷிப்ட் + வி (CTRL + Shift + V) கொடுக்க வேண்டும். இந்த ஷார்ட் கட் கீகள் அனைத்து புரோகிராம்களிலும் செயல்படும்.சில புரோகிராம்களில், பேஸ்ட் செய்தவுடன், ஒரு சிறிய ஐகான் காட்டப்படும். அதில் கிளிக் செய்து விரித்தால், பல ஆப்ஷன்கள் தரப்பட்டு, டெக்ஸ்ட் நம் விருப்பப்படி பேஸ்ட் ஆகும்.
டாகுமெண்ட் உருவான நாள்: வேர்டில் பல டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். சில வேளைகளில் எந்த நாளில் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்தோம் என்று தெரிய வேண்டியதிருக்கும். உருவாக்கிய பின் பலமுறை அதனைப் படித்திருப்போம். பல மாற்றங்களை ஏற்படுத்தியிருப்போம். இருப்பினும் உருவாக்கிய முதல் நாளைத் தெரிந்து கொண்டால் அதன் அடிப்படையில் பல மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்திருப்போம். எங்கு இந்த தேதி கிடைக்கும்?
வேர்டில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின் Insert மெனு கிளிக் செய்து அதில் Field என்பதைத் தேர்ந்தெடுங்கள். இப்போது Field டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Field Names என்று ஒரு பெட்டி இருக்கும். இதில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லுங்கள். அங்கு Create a Date என்று ஒரு பீல்டு காட்டப்படும். இதனைத் தேர்வு செய்தால் உடன் எந்த பார்மட்டில் தேதி காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்வு செய்திட பல பார்மட்கள் வரிசையாகக் காட்டப்படும்.
இதில் கிழமையுடன் கூடிய தேதி பார்மட்டும் இருக்கும். நீங்கள் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், அந்த டாகுமெண்ட் உருவாக்கப்பட்ட முதல் நாள், டாகுமெண்ட்டில் கர்சர் உள்ள இடத்தில் சேர்க்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக