அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 5 அக்டோபர், 2013

இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு: நிலநடுக்க அபாயம் இருப்பதாக எச்சரிக்கை

கொழும்பு: இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலநடுக்க அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுநர் திசநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் சி.பி. திசாநாயக்க, இலங்கையின் கடல் பகுதி மற்றும் நில நடுக்கங்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார். இலங்கைக்குரிய பூமி பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீட்டர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் இந்த வெடிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்த மாற்றம் காரணமாக அதிகளவிலான நிலநடுக்கத்தை இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக