அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 16 அக்டோபர், 2013

மரபு தெரியாத விக்கி முன் விழி பிதுங்க நின்ற மக்கள் பிரதிநிதி!

வட மாகாண சபையின் இரு உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

மன்னாரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திய கலாநிதி குணசீலன் இவ்விதம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் ஊடகங்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.

ஆயினும் இப்புகைப்படங்கள் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளன.

ஏனென்றால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆசனத்தில் அமர்ந்து இருக்க, குணசீலன் எழுந்து நின்று பிரமாணம் செய்கின்றார்.

ஆனால் இவ்வாறான சம்பிரதாய வைபவங்களில் சம்பந்தப்பட்ட இருவரும் எழுந்து நிற்கின்றமையே பாரம்பரிய மரபு.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எழுந்து நின்றமை குறிப்பிடத்தக்கது.

Thainaadu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக