அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 29 அக்டோபர், 2013

சமூகவலைத்தளங்கள் ஊடாக விபச்சாரம்: விளக்கமளிக்கும் காணொளி

சமூகவலைத்தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுடன் எவ்வாறு தொடர்பைப் பேணவேண்டும் என்பது தொடர்பில் பெண்ணொருவர் விலைமாதர்களுக்கு ஆலோசனை வழங்கும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்காணொளி கடந்த பெப்ரவரி மாதம் வெளியாகியுள்ளது.

இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியானது ஆலோசனை வழங்கும் வகுப்பில் பங்குபற்றியிருக்கும் பெண்ணொருவராலேயே எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

மேற்படி காணொளியில் ஆலோசனை வழங்கும் பெண் எவ்வாறு சமூகவலைத்தளங்கள் ஊடாக பணக்கார வாடிக்கையாளர்களை அணுகுவது, இணையத்தை எவ்வாறு தமது தொழிலுக்கு ஏற்ற வகையில் உபயோகிப்பது போன்றவை தொடர்பில் விலைமாதர்களுக்கு விளக்கமளிக்கின்றார்.



மேலும் மோமோ/ வீச்செட்/ வீபோ போன்ற சீன சமூகதளங்களை விலைமாதர்கள் உபயோகிக்கின்றமை தொடர்பில் அப் பெண் விளக்கமளிக்கின்றார்.



இக்காணொளியினாது யூகு, சோஹு, யூடியூப் போன்ற வீடியோ ஹோஸ்டிங் தளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக