அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு இரட்டை அடுக்கு பாதுகாப்பு கொடுக்க

கூகுள், வங்கிக் கணக்கு என அனைத்துமே, இரட்டை அடுக்கு பாதுகாப்பு முறைக்கு மாறி வருகின்றன. குறிப்பாக நம் மொபைல் போன்களை இதற்குப் பயன்படுத்துகின்றன. இது நல்ல பயன் தரும். பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கும் இதனை ஏற்படுத்தலாம்.

இரட்டை அடுக்கு பாதுகாப்பு என்பது, உங்கள் பாஸ்வேர்டுடன், கூடுதலாக இன்னொரு தனி நபர் தகவல் ஒன்றை பாஸ்வேர்டாகத் தருவதாகும். இதனால், ஹேக்கர்கள் உள்ளே நுழைவது தடுக்கப்படுகிறது.

இதனைப் பெற, முதலில் பேஸ்புக் இணைய தளம் சென்று, உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து, உங்களுக்கான பக்கம் செல்லவும். இனி மீண்டும், மேல் வலது புறம் உள்ள கியர் ஐகானைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும்

மெனுவில், Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் திரையில், இடது பக்கம் Security என்பதனைக் கிளிக் செய்திடவும். அடுத்து Login Approvals என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த Login Approvals பிரிவு விரிவடைகையில், அதில், Require a security code to access my account from unknown browsers என்ற பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இப்போது பேஸ்புக், உங்களை சில செட்டிங்ஸ் வழிகளில் அழைத்துச் செல்லும்.

பெரும்பாலும், உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பும் வகையில் செட்டிங்ஸ் மேற்கொள்ளும். மொபைல் போன் பதியவில்லை எனில், ஒன்றைப் பதியுமாறு கேட்டுக் கொள்ளும். இந்த போன் எண் உங்களுடையதுதானா என்று உறுதி செய்து கொள்ள ஒரு டெக்ஸ்ட் மெசேஜாக ஆறு இலக்க எண் ஒன்றை அனுப்பி உறுதி செய்து கொள்ளும். இதனை டைப் செய்து உறுதிப்படுத்தவும்.

ஏற்கனவே, நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிரவுசரைப் பயன்படுத்தி இருந்தால், ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இருந்தால், பேஸ்புக் உங்களிடம் இரண்டாவது அடுக்கு பாதுகாப்பு எண்ணைக் கேட்காது. வேறு ஒரு கம்ப்யூட்டர் வழியாக, பேஸ்புக் சென்றால், குறியீடு எண் அனுப்பி அதனை பதியுமாறு கேட்டு, உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும். இதனைத் தாண்டி எந்த பாதுகாப்பும் உங்களுக்குக் கிடைக்காது. இருந்தாலும், ஒன்றும் இல்லாததற்கு இந்த வகைப் பாதுகாப்பு இருப்பது சரிதானே.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக