அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 27 நவம்பர், 2013

என்னது... மோடியைச் சந்தித்தாரா வடிவேலு?

கோடம்பாக்கத்தைத் தாண்டி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படும் சமாச்சாரம் ஒன்று இப்போது மீடியாவில் ரவுண்டு கட்ட ஆரம்பித்துள்ளது.

அது குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியைச் சந்தித்து, தேர்தல் பிரச்சாரத்துக்கும் ஒப்புக் கொண்டுள்ளார் நகைச்சுவை நடிகர் வடிவேலு என்பதுதான்.

போன தேர்தலில் புயலில் பட்ட அடியிலிருந்து இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார் வடிவேலு. புதிதா இரண்டு பிரமாண்ட படங்களிலும் ஹீரோவாக நடித்துவருகிறார்.

இந்த நேரத்தில் போய் காவிச் சாயம் பூசிக்கொள்வாரா... இதெல்லாம் நடக்கிற விஷயமா? என்று கேட்டால், 'அட இல்லய்யா... உண்மைதான். பெங்களூருவில் நடந்த மோடியின் கூட்டத்துக்குப் பிறகு, படு ரகசியமாக மோடியைச் சந்திக்க வைத்தார்களாம் தமிழக பாஜக தலைவர்கள். வடிவேலுவுக்கு கடந்த தேர்தலில் நடந்த கசப்பான அனுபவங்களையும் எடுத்துச் சொன்னார்களாம். இந்த தேர்தலில் உங்களுக்கு மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கும்.. சேர்ந்து பணியாற்றலாம்,' என தட்டிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் மோடி," என்கிறார்கள்.

இப்படியெல்லாம் நடக்குமாடா மண்டையா? என கவுண்டர் ஸ்டைலில் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் Anti - வடிவேலுவின் கோஷ்டியினர்!

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக