அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்

இணையத்தில் இருக்கும் சில தகவல் தளங்களை, Library of Congress என்னும் அமைப்பு தேர்ந்தெடுத்து, வருங்காலத்திற்கு இது அதிகம் பயன்படும் என்ற முத்திரையுடன், தன் சேமிப்பில் பாதுகாத்து வைக்கிறது.

எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் அடங்கிய தளங்கள் இவ்வாறு சேவ் செய்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேவ் செய்து வைக்கப்பட்ட தளம் ஒன்று என் பார்வையில் பட்டது. இந்த தளத்திற்குச் சென்றால், மானிடச் சரித்திரத்தில், அன்றும் இன்றும் புகழ் பெற்ற பெண்களைப் பற்றிய தகவல்களைத் தருவதாக உள்ளது.

இந்த தளத்தின் முகவரி :

http://www.distinguishedwomen.com

மனித இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் சேவை செய்த பெண்களைப் பற்றிய குறிப்புகளை இந்த தளம் கொண்டுள்ளது. ஏறத்தாழ இன்று வரை, 2000 பெண்கள் குறித்த தகவல்கள் இதில் உள்ளன. இந்த தளத்தின் முகப்பு பக்கத்திற்கு நீங்கள் சென்றவுடன், இடது பக்கம், தளத்தில் சென்று தகவல்களைத் தேட மெனு தரப்பட்டுள்ளது. இணையப் பக்கத்தில் நடுவில் உள்ள மெனுவில், இந்த பக்கத்தில் என்ன மாதிரியான தகவல்கள் தரப்பட்டுள்ளன என்ற குறிப்பு கிடைக்கிறது. வலது பக்கம், அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட தகவல்கள் குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன.

வழி நடத்தும் மெனுவில், பொருள், பெயர்கள் வழியாகத் தேட ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. மேலும், பெண்கள் குறித்த நூல்கள், சிறப்பான தலைமைப் பண்பு கொண்டிருந்த பெண்களைக் குறித்த திரைப்படங்கள், இசை மற்றும் இந்த தளம் ஏன் உருவானது என்பன போன்ற ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. பொருள் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், புகழ் பெற்ற பெண்கள் இயங்கிய சமுதாயப் பிரிவுகள் தரப்பட்டுள்ளதனைப் பார்க்கலாம். இதில் உள்ள பொருள் பிரிவுகள், பார்க்கும் யாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இத்தனை பிரிவுகளா என வியக்க வைக்கும்.

பெயர் பிரிவில், நாம் தகவல் பெற விரும்பும் பெண்களின் பெயர்களை டைப் செய்து எண்டர் தட்டினால், உடனே அதற்கான சிறு குறிப்பு உள்ள பக்கம் கிடைக்கிறது. அங்கு தரப்பட்டுள்ள லிங்க்கில் மேலும் கிளிக் செய்தால், தொடர்ந்து கூடுதல் தகவல்கள் தரப்படுகின்றன. நான் நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நோபல் பரிசு பெற்ற சமூக சேவகி அன்னை தெரசா ஆகியோர் குறித்து உள்ள தளங்களைப் பார்த்து, தகவல்களைப் படித்தேன். தகவல்கள் முழுமையாக இருந்தன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக