அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 29 நவம்பர், 2013

ஹைபன்களும் டேஷ்களும்

வேர்டில் நமக்குப் பலவகை சிறு இடைக்கோடுகள் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ஹைபன், டேஷ் (Predator) என இவற்றை அழைக்கின்றோம். இவற்றிலும் சில வகைகள் இருக்கின்றன. வேர்ட் தொகுப்பினைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் கூட, இந்த வேறுபாட்டினை உணராமல், தேவைப்படும் கோடு இல்லாமல், எதனை வேண்டுமானாலும் பயன்படுத்தி வருகின்றனர். இவை குறித்து இங்கு காணலாம். வேர்ட் நமக்கு மூன்று வகையான ஹைபன்களையும், இரண்டு வகையான டேஷ் கோடுகளையும் தருகிறது. இவற்றில் உள்ள வேறுபாட்டினை அறிந்து கொண்டால், இவை அனைத்தையும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

1. வழக்கமான ஹைபன் (Regular Hyphens): இவற்றை வழக்கமான ஹைபன் கீயினை அழுத்திப் பெறலாம். கீ போர்டில் சைபருக்கு அடுத்து வலது பக்கத்தில் இருக்கும். இதனைச் சிலர் தவறுதலாக டேஷ் கீயாக எண்ணிப் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலத்தில் காம்பவுண்ட் வேர்ட்ஸ் (Compound Words) என்று சொல்கின்ற சொற்களை அமைக்கையில் இதனைப் பயன்படுத்த வேண்டும். (எடுத்துக் காட்டு mixup) இது போன்ற கூட்டுச் சொல் அமைப்பு, ஒரு வரியின் இறுதியில் வந்துவிட்டால், இரண்டாவது சொல் அடுத்த வரிக்குச் சென்று விடும். முதல் சொல்லும் ஹைபனும் முதல் வரியிலேயே இருக்கும்.

2. சிறப்பு ஹைபன் (Optional Hyphen): இவற்றை நாம் சில சிறப்பு இடங்களில் மட்டுமே பயன்படுத்துவோம். எடுத்துக் காட்டாக, ஒரு ஆங்கிலச் சொல் எப்படிப் பிரித்து எழுதப்பட வேண்டும் எனக் காட்ட வேண்டுமென்றால், சொல்லின் இடையே, எழுத்துக்களின் ஊடே இதனைப் பயன்படுத்தலாம். இந்த ஹைபனைப் பெற கண்ட்ரோல் + வழக்கமான ஹைபன் கீயினை அழுத்த வேண்டும். ஹைபனேஷன் டூல், வேர்டில் இயக்கப்பட்டால் தான் இந்த கீகளுக்கான ஹைபன் கிடைக்கும். இந்த ஹைபனேஷன் டூல் இயக்கப்பட்டிருந்தால், சொற்கள் வலது ஓரத்தில் அமைகையில் பிரிக்கப்பட்டால், அங்கே ஹைபன் தானாக அமையும். நாமாக இந்த ஹைபனை, வரி ஓரத்தில் அமைத்தால் தான் அது அச்சில் அச்சிடப்படும்.

3. சொற்கள் இணைந்தே இருக்க ஹைபன் (Non breaking Hyphens): C¢u øí£øÚ Ctrl+Shift+(Ctrl+Shift and the hyphen key) அழுத்தி அமைக்கலாம். ஹைபனோடு ஒரு சொல்லை அமைக்கிறீர்கள். அது வரியின் ஓரத்தில் வருகையில் சொற்கள் பிரிக்கப்பட்டு முதல் சொல் ஹைபனுடன் முதல் வரியிலும், அடுத்த சொல் அடுத்த வரியிலும் இருந்தால், ஹைபன் அமைத்து காம்பவுண்ட் சொல் அமைத்ததற்கான பயனே கிடைக்காமல் போய்விடும் அல்லவா? இதற்காக இந்த ஹைபன் பயன்படுகிறது. இந்த ஹைபனை அமைத்துவிட்டால், ஹைபனுக்கு இரண்டு பக்கமும் இருக்கும் சொல் மற்றும் ஹைபன் ஒரு தொகுதியாகக் கருதப்பட வேண்டும் என வேர்ட் தொகுப்பிற்கு நாம், இந்த ஹைபன் மூலம் சொல்கிறோம். எனவே இந்த ஹைபன் மூலம் அமைத்த காம்பவுண்ட் சொல், வரியின் ஓரத்தில் கிடைக்கையில், பிரிக்கப்படாமல் அடுத்த வரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முதல் வரி சொற்கள் சரி செய்யப்படும். இந்த வசதி எஸ்.டி.டி. கோடுடன் தொலைபேசி எண்களை அமைக்கையில் நமக்குப் பயன்படுகிறது.

4. என் டேஷ் (En dash): இது ஒரு டைப்பிங் டேஷ். என் (n) என்ற கேரக்டர் அளவில் இருப்பதனால், இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இது பொதுவாக எண்களின் ரேஞ்ச் குறிக்கையில் பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக் காட்டு 3–7. இந்த டேஷ் அடையாளம் பயன்படுத்த கண்ட்ரோல் + நியூமெரிக் கீ பேடில் உள்ள மைனஸ் கீயினை இணைத்து அழுத்த வேண்டும். அல்லது ஆல்ட் கீ+ நியூமெரிக் கீ பேடில் 0150 என்ற எண்ணுடன் அமைக்க வேண்டும். தேவைப்பட்டால், வேர்ட் இவ்வாறு அமைக்கும் எண்ணை என் டேஷுக்குப் பின் பிரிக்கும். முன்பாகப் பிரிக்காது. அதாவது என் டேஷ் தனக்கு முன் உள்ள எண்ணோடு இணைந்தே இருக்கும்.

5. எம் டேஷ் (Em dash): இந்த டேஷ் "m" எழுத்து அளவில் இருப்பதால், இந்த பெயர் தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவு, ஒவ்வொரு வகை எழுத்திற்கும் வித்தியாசப்படும். வழக்கமாக என் டேஷ் போல இரண்டு பங்கு அளவில் இது அமைக்கப்படும். இதனை வாக்கியங்களில் பயன்படுத்துகிறோம். வாக்கியம் ஒன்றில் ஒரு பொருள் குறித்து எழுதிய பின்னர், அடுத்து வரும் வாக்கியத்தில் முற்றிலும் மாறுபட்ட, அல்லது வேறுபாடான பொருள் இருப்பின், இந்த டேஷைப் பயன்படுத்தலாம். வேர்டில் ஹைபனைத் தொடர்ந்து இருமுறை பயன்படுத்தினால், தானாகவே எம் டேஷ் அமைக்கப்படும். நாமாக வேறு முறையில் அமைக்க வேண்டும் என விரும்பினால், கண்ட்ரோல் + ஆல்ட்+நியூமெரிக் கீ பேடில் மைனஸ் கீயினை அழுத்த வேண்டும். அல்லது மாற்றாக, ஆல்ட் கீயினை அழுத்திக் கொண்டு நியூமெரிக் கீ பேடில் 0151 அமைக்க வேண்டும். மேலே என் டேஷ் சார்ந்து குறிப்பிட்டது போல, வேர்ட் டேஷுக்கு அடுத்த இடத்தில் தான், இதில் சேர்க்கப்பட்டுள்ள சொற்களைப் பிரிக்கும். எம் டேஷ் எப்போதும் அதற்கு முன் உள்ள சொல்லுடனேயே தங்கும்.

மேலே தரப்பட்டுள்ள டேஷ் அமைக்கும் முறைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். மாற்றி அமைத்தால், நாம் எதிர்பார்க்கும் விளைவுகளுக்குப் பதிலாக, வேறு விளைவுகள் ஏற்படலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக