அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 28 நவம்பர், 2013

மரண வியாபாரங்கள் தொடருமா?

புலி ஆர்வலர்கள்,உண்மையான,நீதியான தீர்வுக்கும் என்றுமே மனப்பூர்வமாய் விரும்பியது கிடையாது.
போரை தொடர்,அடி ,குத்து... .30 நீண்ட நெடும் காலம் தமிழ் மக்கள் கண்ட பலன் தான் என்ன`?

எப்படி முடியும் என்று சிந்திப்பவர்கள் கூறினார்களோ அப்படியே முடிந்தது.

தமிழர்கள், யாழ் வைத்திய சாலையில் தினமும் IPKF ஆல் கொல்லப்பட்ட வைத்திய ஊழியர்களுக்கும் தினமும் விளக்கு கொளுத்துகிறார்கள்.

தமிழர்கள்,புலிகளால் அழிக்கப்பட்ட சபாரத்தினம் போன்ற மாற்று போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

போராட்டம் திசை மாறி யாழ் மக்களின் கலாச்சாரம் மா,றி கொழும்பில் கனடா ,ஐரோப்பா,அவுஸ்திரேலியா இற்கு ,visit visa ,tourist visa apply பண்ணுதல் ,அங்கு மிளகாய் தூள் அனுப்ப ஏராளமான முகவர் நிலையங்கள் கொழும்பில் ,என பரிணமித்தது .

அன்று பலவந்தமான ஆள் சேர்ப்பு ,வன்னியில் நடந்த போதும், அங்கு என்ன நடக்கிறது என்று அறிந்தும் பார்த்துக்கொண்டு கொடுப்புக்குள் சிரிதுகொண்டிருந்த தமிழ் அரசியல் வாதிகள்,புலம்பெயர் புலிகள்,

உண்மையை புரிந்த ஏழை பிரதேச போராளிகள் ,பிரிந்தது எல்லாம் பழைய கதை.

தாங்கள் வெள்ளையர் தேசங்களுக்கு அகதி அந்தஸ்து கோரி,பெண்களை போர் முனைக்கு அனுப்பி விட்டு, இன்று அவர்களின் நிர்வாண உடல்களை சர்வதேசமெங்கும் ,என்னென்னெ இணைய தளங்கள் உண்டோ அதனூடாக அனுப்பி ,பிரசாரம் செய்யும் கோயபல்சுகள் .

இன்று தீர்வை விட யுத்த குற்றமே தீர்க்கப்பட வேண்டுமென்ற ,முழு உலகெல்லாம் தடை செய்யப்பட்ட புலி ஆதரவாளர்கள்.

இலங்கையில் இனங்களுக்குகிடையே தொடர்ந்து,வெறுப்பையும்,கசப்பையும் எவ்வளவு ஏற்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு ஏற்படுத்தும் புலம் பெயர் தமிழர்,இரத்த ஆறுகளை பற்றி யாருக்கென்ன கவலை ?

அன்று சதாம் ஹுசைன் ,இரசாயன ஆயுதம் வைத்தே இருக்கிறான் என்று பல்லுடை பட்ட டோனி பிளையர் ,இன்று அகதிகளை திருப்பி அனுப்புவதே கொள்கையாகக் கொண்ட கமரூனை வழிகாட்டும் தமிழர்,

யுத்த விசாரணை என்றால் எல்லாம் தான், புலித்தலைமை வளைக்கப்பட்ட பின் உலகெங்கும் தெருவில் அகோரமாய் ,ஆர்ப்பரித்த தமிழர்,ஒரே இரவில் may 19 அன்று ஒருவருமே காணாமல் போன மாயம், பணயக்கைதிகளை பிடித்து வைக்க தூண்டியவர்கள், ஐரோப்பா,கனடா இல் இந்த ஊர்வலங்களின் பின்னால் நின்றவர்கள் எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டும்.இதை உணராத அப்பாவிகள் ..இந்த உலகம் முழுவதும்,தம் போன்ற முட்டாளகள் தான் என எண்ணும் இவர்கள்,,

இறுதியாக சத்தியம் எங்குள்ளதோ அங்கு ஜெயம்,புலம் பெயர் புலிகள் இந்த சரித்திர வார்த்தைகளை மதிக்கவும் மாட்டார்கள்.அடுத்த தொழில், குழப்பி விடுவது.தூண்டி விடுவது,அழிவை ஏற்ப்படுத்துவது,,,

மனிதருக்கு தார் மீகப் பொறுப்பும் உண்டு. அவை இல்லாதவர்கள் மிருகங்கள். அந்நிய நாட்டில் ஆரம்பத்தில் வீடுகள்,தொழில்கள் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் .இன்று இலங்கை ஏழை தமிழரை பற்றி கவலைபப் படுவார்கள?

இறுதியாக இலங்கை அந்நிய வருமானம் இல்லாத தமிழ் பொது ஜனங்களே ,இந்தக்கூட்டம் உங்களை வாழ விடப்போவதில்லை.சமாதானம் பண்ணுபவன் பாக்கியவான். இலங்கை போன்ற மூவின மக்கள் வாழும் ஏழை நாட்டில் குழப்பங்களை,கசப்புகளை ,இரத்த ஆறுகளை ஏற்ப்படுத்துவது போன்ற இலகுவான செயல் வேறு எதுவும் இல்லை.30 வருடம் இக்கூட்டம் செய்த சேவை,பலன் தான் என்ன?

30 வருட மகா தவறில் இவர்கள் ஒன்றுமே கற்க வில்லை. புலம் பெயர் புலிகள் பிரச்சினை தீர்ந்தவுடன் இங்கு வரப்போகிறார்கள? may 19 உடன் காணாமல் போன மாதிரி அவர்கள் ஒரே இரவில் போய் விடுவார்கள்.

பிறகு நல்ல சூழல் வர மீண்டும் தோன்றுவார்கள்.

விக்னேஸ்வரன் கூறிய இது உள்ளக கணவன்-மனைவி பிரச்சினை என்ற கூற்று ,புலம் பெயர் புலி ஆர்வலருக்கும் பொருந்தும் தானே ?



துருவக்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக