அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 30 நவம்பர், 2013

தமிழகத்தில் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்: கைது செய்யுமாறு சுப்ரமணியம் கோரிக்கை

தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

கத்தோலிக்க பாதிரியாரான அருட்தந்தை கஸ்பார்ராஜ், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக கூறி, அமெரிக்காவின் எப்.பீ.ஐ. புலனாய்வு தரப்பினர் நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகவும், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், அண்மையில் இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உள்துறை அமைச்சு, தமிழக அரசாங்கத்திடம் கோரியுள்ள நிலையில், இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக