அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 15 நவம்பர், 2013

இராட்சத கட்டியைக் குணப்படுத்த வயாகரா

கழுத்தில் இராட்­சத கட்டி ஏற்­பட்டு உயி­ரா­பத்­தான நிலையை எதிர்­கொண்­டுள்ள மெக்­ஸிக்கோ சிறுவன் ஒரு­வனைக் குணப்­ப­டுத்த பாலியல் ஊக்க மாத்­தி­ரை­யான வயா­க­ராவை பயன்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.


சியுடாட் ஜுவாரெஸ் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த ஜோஸ் சியர்­ரனோ என்ற மேற்­படி 10 வயது சிறு­வனின் கழுத்தில் வளர்ந்த இராட்­சத கட்­டி­யா­னது, அவ­ரது மூச்­சுக்­கு­ழாயை அழுத்தி சுவாச செயற்­கி­ர­மத்தை நிறுத்தும் அபாயம் மிக்­கது என மருத்­து­வர்­களால் இனங்­கண்­ட­றி­யப்­பட்­டது.

அந்தக் கட்­டியின் வளர்ச்சி நிலையைக் கட்­டுப்­ப­டுத்­தாமல் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்­று­வது பாது­காப்­பா­ன­தாக அமை­யாது என மருத்­து­வர்கள் கரு­தினர்.

இந்­நி­லையில் சிறுவர்களில் இத்­த­கைய கட்­டி­களின் வளர்ச்­சியை வயா­கரா கட்­டுப்­ப­டுத்­து­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து ஜோஸுக்கு வயா­கரா மாத்­திரையை வழங்­கி சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கான செலவை மாத்திரைகளை உற்பத்தி செய்து வரும் பபிஸர் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக