அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 29 நவம்பர், 2013

ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற

மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற, விண்டோஸ் எக்ஸ்புளோரர் இரண்டு விண்டோவை திறந்து பயன்படுத்துகிறேன். ஆனால் ஒன்றுக்குப் பின் ஒன்று அமைந்துவிடுவதனால், ஒவ்வொரு பைலை இழுத்துவிடுகையிலும் சிக்கல் ஏற்படுகிறது. வேறு சுருக்கமான வழிகளில் இதனை மேற்கொள்ள முடியுமா?

மானிட்டர் திரையின் நீள, அகலம் பொறுத்து இந்த பிரச்னை ஏற்படும். இதற்குத் தீர்வாக இணையத்தில் புரோகிராம் ஒன்று உள்ளது. FreeCommander என இதற்குப் பெயர். இதனை
http://www.freecommander.com/fc_downl_en.htm
என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். fc_setup.zip என்ற பைல் கிடைக்கும். இதனை செட் அப் செய்து இந்த புரோகிராமைப் பதிந்து இயக்கலாம். இது விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இரண்டு விண்டோக்களை அடுத்தடுத்து பக்கமாகத் தருகிறது. இதனால் இரு வேறு டைரக்டரிகளில் உள்ள பைல்களை இழுத்து விடுவது எளிது. இந்த புரோகிராமினை ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக