அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

வேர்ட்: டெலீட், கிளியர் மற்றும் கட்

வேர்ட் குறித்து நாம் படிக்கும் நூல்களில், நாம் delete, clear, மற்றும் cut என்ற மூன்று செயல் சொற்களைச் சந்தித்திருப்போம். இவை மூன்றும், டெக்ஸ்ட்டுடன் நீங்கள் மேற்கொள்ள முடிகின்ற செயல்பாட்டினைக் குறிக்கும். இந்த மூன்று சொற்களும், ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தலாம் என்றாலும், இவற்றின் செயல்பாடுகளில், சிறிய அளவில் வேறுபாடு உள்ளது.

Delete என்பது, டெக்ஸ்ட் அல்லது வேறு ஒரு அம்சத்தினை, உங்கள் டாகுமெண்ட்டிலிருந்து அழிப்பது. இதற்கு Del கீயை அழுத்துகிறோம். இது கிட்டத்தட்ட Clear என்ற செயல்பாட்டிற்கு ஒத்ததாகும்.

Clear என்பது, வேர்ட் டாகுமெண்ட் ஒன்றிலிருந்து டெக்ஸ்ட் அல்லது வேறு ஒரு அம்சத்தினை நீக்குவது. இங்கு நீக்கப்படுவது கிளிப் போர்டில் சேவ் செய்யப்பட மாட்டாது.
இதனை Del அல்லது Backspace கீயை அழுத்தி மேற்கொள்கிறோம்.

Cut என்பது, டாகுமெண்ட் ஒன்றிலிருந்து டெக்ஸ்ட் அல்லது இன்னொரு அம்சத்தினை நீக்கி, அதனை கிளிப் போர்டில் பதிந்து வைத்துக் கொள்வதாகும். இந்த செயல்பாடு, Ctrl+X என்ற கீகளை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

அல்லது ஹோம் டேப்பில், Cut டூலைப் பயன்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக