அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 29 நவம்பர், 2013

பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்துவது எப்படி ?

முதலில் உங்கள் டெஸ்க் டாப் சென்று அதில் மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடவும். அந்த போல்டர் திறந்தவுடன் அப்படியே அதனை விட்டுவிட்டு அடுத்த ஸ்டெப் செல்லவும். அடுத்தபடியாக பிளாஷ் டிரைவிற்கான யு.எஸ்.பி. போர்ட்டில் ட்ரைவினைச் செருகவும். நீங்கள் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் பிளாஷ் ட்ரைவினை இயக்க அதற்கான ட்ரைவர் எதனையும் இயக்கிச் சேர்க்க வேண்டியதில்லை.

ட்ரைவினைச் செருகிவிட்டு திரையைப் பார்க்கவும்.

உங்கள் கம்ப்யூட்டர் புதிய பிளாஷ் ட்ரைவினைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டதாக ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தி பெரும்பாலும் திரையின் வலது புறம் கீழாகக் காட்டப்படும். "Found New Hardware" என்ற செய்தி கிடைக்கும்.

இனி மை கம்ப்யூட்டர் விண்டோவிற்குச் சென்று அங்கே பார்த்தால் ஒரு புதிய ட்ரைவ் ஒன்றின் எழுத்து இணைக்கப்பட்டு அதில் "Removable" என்ற சொல் இருக்கும்.

இந்த ட்ரைவ் எழுத்து கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் ஏற்கனவே உள்ள ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷனுக்கேற்ற வகையில் வேறுபடும். இந்த ட்ரைவினைக் கண்டுபிடித்து அதில் கிளிக் செய்திடவும்.

இந்த ட்ரைவிற்கான விண்டோ திறக்கப்பட்டு காலியாகத் தெரியும். பயப்பட வேண்டாம்.
உங்கள் பிளாஷ் ட்ரைவ் புதியதுதானே. அதில் தான் எதுவும் பைல் இல்லையே. அடுத்து இதில் பைல்களை சேவ் செய்திட விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் இன்னொரு விண்டோ திறந்து பைல்களை தேர்ந்தெடுத்து அப்படியே இழுத்து வந்து பிளாஷ் ட்ரைவ் விண்டோவில் விட்டுவிடலாம். அதே போல பின்னொரு நாளில் இதிலிருந்தும் பைல்களைத் தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில் விட்டுவிடலாம்.

வேலை முடிந்த பின் சிஸ்டத்திலிருந்து எடுத்துவிடலாம்.

உங்களுடைய பிளாஷ் ட்ரைவில் மூடி தனியே எடுக்கப்படக் கூடியதாக இருந்தால் அதனைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்து கம்ப்யூட்டரிலிருந்து எடுத்த பின் மூடி வைக்கவும்.

சில பிளாஷ் ட்ரைவ்களில் அதன் பின்புறத்தில் செருகி வைத்துப் பயன்படுத்தும் படி இருக்கும். சில பிளாஷ் ட்ரைவில் ஸ்லைடர் வசதி தரப்பட்டிருக்கும்.

மேலாக உள்ள பிளாஸ்டிக் பகுதியைத் தள்ளினால் பிளாஷ் ட்ரை வ் சற்று வெளியே நீட்டிப் பார்க்கும். அதனைச் செருகிப் பயன்படுத்தலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக