அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 28 நவம்பர், 2013

வால் பேப்பர் -Wallpaper

வீட்டில் கம்ப்யூட்டரை, இயக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த வால்பேப்பரை அமைக்கின்றனர். இதனால் பிரச்னை வருகிறது. மொத்தமாக நான்கு வால்பேப்பர்களைத் தேர்வு செய்து, மாறி மாறி வரும்படி செய்திட முடியுமா?

அதற்கேற்ப ஒரு புரோகிராம் உள்ளது. அந்த புரோகிராமின் பெயர் Wallpaper Master. இதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வால் பேப்பர்கள் அனைத்தையும், குறிப்பிட்ட கால இடை வெளியில் கம்ப்யூட்டரில் ஒரு சுற்றில் காட்டிக் கொண்டே இருக்கும்.

இந்த கால இடைவெளியை நீங்களே நிர்ணயம் செய்திடலாம். இந்த புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட பதிப்பினைப் பெற 20 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும் இலவச பதிப்பு ஒன்றும் கிடைக்கிறது. இதன் தள முகவரி http://jamesgart.com/wallpaperchanger/.

இந்த தளத்தில் கீழாக freeware என்று இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு உள்ள டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்து, இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்த பின், கம்ப்யூட்டரை இயக்குகையில் வால் பேப்பர் மாஸ்டர் இயங்கத் தொடங்கும். இதற்கான ஐ கானை டூல்பாரில் பார்க்கலாம். டூல்பாரில் ரைட் கிளிக் செய்து, வால் பேப்பர் மாஸ்டரை இயக்கவும்.

இதில் உள்ள Add Files என்பதில் கிளிக் செய்து, உங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பும் வால்பேப்பர் இமேஜ்களைத் தேர்ந்தெடுக்கவும்.

கண்ட்ரோல் கீ அழுத்தி, இந்த பைல்களைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு வால்பேப்பருக்கும், அதற்கான பொசிஷனையும் அமைக்கலாம். இதில் உள்ள கலர் டேப்பினைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு இமேஜுக்கும், அதன் பின்னணி நிறத்தையும் செட் செய்திடலாம்.

உடன் வால் பேப்பர் மாஸ்டர் இயங்கத் தொடங்கி, வால் பேப்பர் படங்களைக் காட்டும். உங்களுக்குப் பொறுமை இன்றி அடுத்த படத்தைக் காண வேண்டும் எனில், வால் பேப்பர் மாஸ்டர் ஐகானில், லெப்ட் கிளிக் செய்தால் அடுத்த வால் பேப்பருக்கு மாறும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக