அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

எய்ட்ஸ் நோயை பற்றிய சில தவறான கருத்துக்கள்...

நமது உடலின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் நாம் ஊட்டச்சத்து நிறைந்த உணவையே உட்கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் நம்மை பாதிக்கும் நோய்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். எனினும், சில நோய்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கின்றது. இவை சாதாரண காய்ச்சல், ஜலதோஷம், போன்றவைகளாக இருந்தால் ஆபத்து எதுவும் இல்லை. ஆனால், சில வகை நோய்கள் நமது உயிரை பறிக்கும் நோய்களாக இருக்கின்றது. இவற்றை கண்டறிந்து சரியான முறையில் சிகிச்சை அளித்து நோயில் இருந்து விடுபடலாம்.



இவ்வுலகம் முழுவதிலும் 70 மில்லியனுக்கும் மேலான மக்கள் அக்குவயர்ட் இம்மியுனோ டெபிஷியென்சி சிண்ட்ரோம் என்றழைக்கப்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 34 மில்லியனுக்கும் மேலான மக்கள் எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்துவருகின்றனர்.

இந்த கொடிய நோயை குணப்படுத்த வழி இல்லாததால், உயிருடன் வாழுவதற்கு இந்நோயோடு போராடவேண்டும். மக்களிடையே நிலவிவரும் எய்ட்ஸ் நோயின் தவறான கருத்துகளாலும் புனைக்கதைகளாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளியாகவே பார்க்கச் செய்கின்றது. பெரும்பாலானோர் பிறப்பின் காரணமாகவோ தற்செயலான வழியாகவோ அல்லது எதிர்பாராத வழியாகவோ இந்த ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான மக்கள் இந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டால் பயம் கொள்ளுகின்றனர். எய்ட்ஸ் நோயை பற்றிய அடிப்படை அறிவு இல்லாத பெரும்பாலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகத் தெரியாததால் அவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். எய்ட்ஸ் நோயைப் பற்றி பரவி வரும் தவறான கருத்துக்களால், மக்கள் அவர்களுடன் பழக பயந்து அவர்களை விலக்கி வைப்பதால் அவர்களின் உணர்ச்சிகள் பாதிக்கப்படுகின்றது. எய்ட்ஸ் பற்றிய பொதுவான அறிவு இல்லாததாலும் அதனை பற்றிய கட்டுக்கதைகளாலும் பெரும்பாலான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தவறான களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்றைய தகவல் உலகத்தில், நாம் அனைவரும் எய்ட்ஸ் நோய் பற்றிய புனைக்கதைகளை அழித்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இருக்கும் தவறான கருத்துக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களின் ஆதரவு, அன்பு, அக்கறை போன்றவை தேவைப்படும். இந்த நோயை பற்றி பரவிவரும் புனைகதைகளில் இருந்து மீண்டு வருவதற்கு தோள் கொடுக்க வேண்டும். மேலும், இந்த புனைக்கதைகளால் சாதாரண மக்கள் பாதிப்படைந்து எய்ட்ஸ் பற்றிய தவறான எண்ணத்தை கொண்டுள்ளனர்.

உடலுறவினால் மட்டுமே வரும்

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு வைத்துக்கொண்டால் எய்ட்ஸ் நோய் வந்துவிடும் என்பது இந்நோயைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளில் ஒன்றாகும். ஏன்னெனில், எச்.ஐ.வி யானது இரத்தத்தின் மூலமாகவே பரவும் அல்லது பாதிக்கப்பட்ட இரத்தத்தை இன்னொருவருக்கு செலுத்துவதன் மூலமாகத் தான் பரவும்.

அவர்களுடன் சேர்ந்து வாழ்வது

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் நம்முடன் இருந்தால் அதன் மூலமாக நமக்கும் பரவும் என்பது இந்நோய் பற்றிய கட்டுக்கதைகளில் முற்றிலும் தவறான ஒன்றாகும். தொடுதல், கண்ணீர்,வியர்வை, எச்சில் போன்றவற்றின் மூலமாக எச்.ஐ.வி நோய் பரவாது. அதனால், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரத் தழுவிக் கொள்ளலாம்.

கொசுக்கள்

கொசுக்கள் மூலமாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய் பரவாது. இந்த வைரஸ் கொசுக்கள் மூலமாக பரவாது என பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கொசுக்களின் உடலில் இந்த வைரசின் ஆயுள் காலம் சிறிது நேரம் மட்டும்தான்.

எய்ட்ஸ் தான் வாழ்வின் முடிவு

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பின்பும் ஒருவர்க்கு வாழ்வு இருக்கின்றது. இன்றைய மேம்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பான ஆண்டிரெட்ரோவைரல் மருந்தின் மூலமாக எச்.ஐ.வி பாசிடிவ் உள்ள மக்கள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரின் ஆயுள் காலத்தை நீட்டிக்கலாம்.

வாய்வழி உடலுறவினால் பாதிக்கும்

வாய்வழி உடலுறவின்போது எச்.ஐ.வி நோய் நமது உடல் அமிலங்கள் மூலமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இவை நமது வாயில் உள்ள வெடிப்புகள், புண்கள், சிராய்ப்புகள் மற்றும் வாய் தொண்டை போன்றவற்றில் ஏற்படும் தொற்று நோய்களாலும் பரவும்.

டாட்டூஸ் அல்லது உடலை துளைக்கும் பொருட்கள்

டாட்டூஸ் அல்லது உடலை துளைக்க பயன்படுத்தப் படும் சுத்தீகரிக்கப்படாத பொருட்கள் மூலமாக எச்.ஐ.வி நோய் பரவும். நமது உடலையோ அல்லது சருமத்தையோ துளைக்கும் எந்த பொருளையும் ஒரு முறைக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. அப்படி உபயோகித்தால் முறையான வழியில் அவற்றை சுத்தீகரித்து பயன்படுத்த வேண்டும்.

குழந்தை பிறப்பு

ஒரு எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோயுள்ள பெண் தனது கருவுற்றிருக்கும் காலத்தில் முறையான சிகிச்சைகளையும் மேற்கொண்டால் எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோயில்லாத குழந்தையை பெற்றெடுக்க முடியும். அந்தத் தாய் தன் குழந்தைக்கு பால் புகட்ட கூடாது.

எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட இருவர் பாதுகாப்பின்றி உடலுறவு வைத்துக் கொள்ளுதல்

எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோயில் பல வகை உள்ளது. உங்களுக்கு எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோய் இருந்தாலும், வேறு வகையான எச்.ஐ.வி-யால் பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மருந்து எதிர்ப்பு விகாரங்கள் மூலமாக பாதிக்கப்படலாம்.

எச்.ஐ.வி எய்ட்ஸ் இரண்டுமே ஒன்றுதான்

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு CD4 அளவு 200 குறைவாக இருக்கும் அல்லது அவர்கள் புற்றுநோய் அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஒரு மனிதர் எய்ட்ஸ் இல்லாமல் எச்.ஐ.வி-யுடன் பல வருடங்கள் வாழலாம். உங்களுக்கு எச்.ஐ.வி உள்ளது என்றால் எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது.


Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக