அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 26 டிசம்பர், 2013

ராஜஸ்தானி ராம் சன்னே ரெசிபி

ராஜஸ்தானி ராம் சன்னே ஒரு ராஜஸ்தான் ரெசிபி. இந்த ரெசிபி மிகவும் பிரபலமான ஒரு ரெசிபியாக இல்லாவிட்டாலும், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ரெசிபி நம் ஊரில் செய்யப்படும் வடைக்கறி போன்று காணப்படும்.

தேவையான பொருட்கள்:

ராம் சன்னே செய்வதற்கு...

கடலை மாவு - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - 1 பௌல்

கிரேவி செய்வதற்கு...

வெங்காயம் - 2 கப் (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 8-10 பற்கள்
கடுகு எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 கப் (நறுக்கியது)
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
வறுத்த சீரகம் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - அலங்கரிக்க

செய்முறை:

ராம் சன்னே செய்முறை

* முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு மற்றும் 2 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின் குளிர்ச்சியான நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, 15 நிமிடம் ஈரமான துணியால் மூடி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதனை வெதுவெதுப்பான நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கிரேவி செய்முறை

* முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதனை அடுப்பில் இருந்து கீழே இறக்கி 1 நிமிடம் குளிர வைத்து, பின் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்த்து, பிறகு அடுப்பில் வைத்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, தயிர் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

* பின் மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
 * பிறகு 3-4 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க விட்டு, பின் ராம் சன்னேவை நீரில் இருந்து எடுத்து, நீரை பிழிந்துவிட்டு, கிரேவியில் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 10-12 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், சுவையான ராஜஸ்தானி ராம் சன்னே ரெசிபி ரெடி!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக