உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி நேற்றிரவு காலமானார்.
கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி.
தற்போது 65 வயதாகும் குள்ளமணி கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று இரவு 9 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
அன்னாருடைய உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப் படுகிறது.
மறைந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணிக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக