லிங் பிங்கின் புகைப்படத்துடன் அன்ட்ரெஸ்
படுக்கையில் சலிப்பையூட்டுபவராக உள்ளதாக குற்றஞ்சாட்டி தனது 42 வயது மனைவியை 70 வயது கணவர் படுகொலை செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்திலுள்ள கெயிர்னஸ் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அவுஸ்திரேலியரான கிளவுஸ் அன்ட்ரெஸ், தனது சீன மனைவியான லிங் பிங் கவோவை படுகொலை செய்து அவரது உடலை 60 லீற்றர் அமிலத்தால் நிரப்பப்பட்ட சக்கரம் பொருத்தப்பட்ட குப்பைத் தொட்டியில் அமிழ்த்தி உருச் சிதைத்திருந்தார்.
அன்ட்ரெஸுக்கும் லிங் பிங்கிற்கும் திருமணமாகி 5 வருடங்களில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.
அவர் ஆரம்பத்தில் தனது மனைவியின் மரணத்தை ஒரு விபத்தாக காண்பிக்க முயற்சித்துள்ளார்.
தனது மனைவி தாய்லாந்தைச் சேர்ந்த தனது காதலியுடன் ஒப்பிடுகையில் படுக்கையில் மிகுந்த சலிப்பூட்டுபவராக உள்ளதாகவும் அவரது சமையலும் சகிக்க முடியாது மோசமாகவுள்ளதாகவும் அன்ட்ரெஸ் மேற்படி படுகொலையை செய்வதற்கு முன் தனது காதலியின் நண்பியின் கணவரான ஜோன் கன்னரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாய்லாந்தைச் சேர்ந்த தனது காதலியை அன்ட்ரெஸ் அவுஸ்திரேலியாவுக்கு வரவழைப்பதற்கு விரும்பியிருந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக