அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல்

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1 (பெரியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கத்திரிக்காயை நன்கு சுத்தமாக கழுவி, அதனை கத்தி கொண்டு லேசாக கீறி விட வேண்டும்.

பின் அதில் எண்ணெயை தடவி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி வைத்துள்ள கத்திரிக்காயை போட்டு, கத்திரிக்காய் கருப்பாக மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பிறகு அதன் தோலை நீக்கி விட்டு, அதனை கையால் மசித்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட்டு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு, 2-3 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் மசியல் ரெடி!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக