அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

பாலகியின் மீது பாய்ந்த பராக் ஒபாமாவின் நாய் (படங்கள் இணைப்பு)


அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையில் நத்தார் அலங்­கா­ரங்­களை மேற்­கொள்ளும் வைபவம் புதன்­கி­ழமை மாலை இடம் பெற்­ற­போது, அந்­நி­கழ்வில் விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்ட பால­கி­யின் மீது ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் புதிய நாய்க்­குட்டி பாய்ந்து அவரை நிலத்தில் வீழ்த்­தி­யதால் அங்கு பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

நத்தார் தினத்­தை­யொட்டி வெள்ளை மாளி­கையை அலங்­க­ரிப்­ப­தற்கு முதல் பெண்­மணி மிசெல் ஒபா­மா­வுக்கு உத­வு­வ­தற்­காக வந்­தி­ருந்த இரா­ணுவ குடும்­பங்­களைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான சிறு­வர்­களில் அஷ்ரின் கார்ட்னர் (2 வயது) என்ற மேற்­படி பால­கியும் ஒரு­வ­ராவார்.

இந்­நி­லையில் மிசெல் ஒபாமா தமது நாயின் செய­லுக்­காக மன்­னிப்­புக்­கோரும் பாவ­னையில் பால­கியை கட்­டி­ய­ணைத்து ஆறுதல்படுத்தினார்.

இந்த சம்பவத்தால் பாலகிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக