அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

“திசு விரிவாக்கம்” -மலேஷியா நாட்டு வாலிபருக்கு எரிந்த பாதிமுகம் மறுகட்டமைப்பு

சென்னையில் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி சாதனை

மலேசியாநாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற 28 வயது வாலிபர் எலெக்ட்ரீஷனாக பணி புரிந்து வந்தார்.  இவர் எலெக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட அதிக மின்னழுத்தத்தால் ஏற்பட்ட தீ விபத்தினால் அவர் தவறுதலாக அருகில் அதிக வெப்பத்துடன் இருந்த கேஸ் வெல்டிங் ட்ரே மீது விழுந்தார். 

இதனால் அவர் இடது பக்க முகம் கரிகிக் காயமானது. அவசர சிகிச்சைப்பிரிவில் இவ ருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

ஆறு மாதங்களுக்குப் பின்பு கால்தொடைப் பகுதியிலிருந்து தோல் பதிய அறு வைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இவ்வறுவைச்சிகிச்சைக்கு பின்பு இடது பக்க முகத்தின் தோல் சுருங்கி நிறம் மாறி விரும்பத்தகாத தோற்றத்தை அளித்தது. தன் முகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தினால் ஸ்ரீதரால் மீண்டும் வேலைக்குச் செல்ல இயலவில்லை. 

மேலும் , அவரது திருமண ஏற்பாடுகளும் தடைப்பட்டு நின்றன. பின்பு பல மருத்துவமனைகளை நாடியும் பலனில்லை. ஓராண்டிற்குப் பிறகு தன் நண்பர் ஒருவரிடம் சென்னையின் பிரபல முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம். பாலாஜியைப் பற்றி அறிந்து சென்னைக்கு வந்தார்.

டாக்டர் பாலாஜி ஸ்ரீதரின் முகத்தை நன்கு பரிசோதனை செய்து சிகிச்சை முறையினை திட்டமிட்டார்.

அதி நவீன “திசு விரிவாக்கம்” அறுவைச் சிகிச்சை முறை டாக்டர் பாலாஜி “திசு விரிவாக்கம்” (Tissue expansion) என்னும் முகச்சீரமைப்பு துறையின் அதிநவீன சிகிச்சை முறையினைக் கொண்டு இவரின் முகத்தினை மறுகட்ட மைப்பு செய்தார். இம்முறைப்படி சீரான தோலினுள் கட்டுப்பாட்டிலுள்ள அழுத்தத் தினை செலுத்தினால் அது தோல் மற்றும் அதன் திசுவினை விரியச் செய்கிறது. இம்மு றைப்படி நோயாளியின் தோலின் நிறம் தன்மை மற்றும் தடிமன் முற்றிலுமாக மாறுபடாமல் புதிய திசுக்கொண்ட தோல் உருவா கிறது.

நோயாளிக்கு ஏற்பட்ட காயத்தின் அள வினை அளந்து அதன் பரிமாணத்தைப் பொறுத்து
Tissue expander என்னும் கருவியின் அளவினை டாக்டர் எஸ்.எம்.பாலாஜி
தேர்வுசெய்தார். இடது கன்னத்தில் Tissue expander கருவி பொருத்தப்பட்டு அதனினுள்
70ml உப்புநீர் (saline) வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்பட்டது. இது ஒரு பலூன் மாதிரி வீங்கி தேவைக்கேற்ற அழு த்தத்தினை அளித்ததனால் Tissue expan sion முறைப்படி புதிய சருமத்தை இவ்வா லிபருக்கு உருவாக்கியது. இம்முறைப்படி எந்தவித பின்விளைவுகள் இன்றி இச்சிகி ச்சை மேற்கொள்ளப்பட்டது.

புதுமையான அறுவைச் சிகிச்சை முறை யினையும் முகச்சீரமைப்பு துறையின் நவீன நுட்பத்தையும் கொண்டு இந்த கொடிய மின்சார விபத்திலிருந்து ஸ்ரீதர் என்னும் வாலிபரின் முகத்தினை புனரமைப்புச் செய்த டாக்டர் எஸ்.எம்.பாலாஜியை அவரது பெற் றோர் வெகுவாக பாராட்டி நன்றி யைத் தெரி வித்து மகிழ்ச்சியோடு விடை பெற்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக