அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 4 டிசம்பர், 2013

கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் (Cervix Cancer)

கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் (Cervix Cancer) எவ்வாறான பெண்களில் ஏற்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கான வழிகள் எவை?

கர்ப்பப்பை வாசல்ப் புற்றுநோய் எந்தக் குடும்பப்பெண்ணுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறவின் போது அதாவது தாம்பத்திய உறவின்போது கர்ப்பப்பை வாசலில் ஏற்படும் வைரஸ் தொற்றினால் காலப்போக்கில் இப்புற்று நோய் ஏற்படுகின்றது. இவ்வாறான வைரஸ் தொற்று நிலையை ஒழுங்கான பரிசோதனை மூலம் குடும்பப் பெண்களில் கண்டறிந்தால் புற்றுநோய் வரமுன்னரே தடுத்து விடலாம் இதற்கான சரியான பொது அறிவையும் விழிப்புணர்வையும்

மக்களுக்கு வழங்குவதன் மூலம் இப்பரிசோதனைக்கு பெண்கள் முன்வருவார்களேயானால் இதனை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். இது பப்சிமியர் பரிசோதனை என அழைக்கப்படும். இது 3 வருடங்களுக்கு ஒரு தடவை 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பப் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வைரஸ் தொற்றை தடுக்கும் தடுப்பூசிகளை இளம் பெண்களுக்கு வழங்குவதன் மூலம் அதாவது 16 - 18 வயது பெண்களுக்கு இவ்வாறு மூன்று தடுப்பூசிகள் போடப்பட்டால் பின்னர் அவர்கள் மணம் முடித்து குடும்ப வாழ்வில் ஈடுபடும்போது இவ் வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் இப்புற்றுநோயை வராமல் தடுக்கலாம். இவ்வாறான வழிகளில் இப்புற்றுநோயை எமது பெண்களுக்கும் வராமல் தடுக்க முடியும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக