பல இணைய தளங்களில், உங்கள் யூசர் ஐ.டி.யை நினைவு வைத்துக் கொள்ளவா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. நீங்களும் தாராளமாக, வைத்துக் கொள் என்று யெஸ் பட்டனில் கிளிக் செய்திருப்பீர்கள். ஆனால், எந்த தளமும் நினைவில் வைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏன் இந்த நிலை? எங்கு பிரச்னை?
பிரச்னை உங்கள் பிரவுசரில்தான் உள்ளது. அதனைச் சரி செய்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்.
நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துவதாக இருந்தால், கியர் ஐகான் அல்லது பைல் மெனுவில் கிளிக் செய்திடவும்.
பின்னர், Internet Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Internet Options விண்டோ திறக்கப்படுகையில், Content டேப் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து AutoComplete என்பதற்கு அருகே உள்ள செட்டிங்ஸ் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர், User names and Passwords on forms என்று உள்ளதற்கு அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், குரோம் பிரவுசரில், மேலாக வலதுமூலையில் மெனு தேர்ந்தெடுக்கவும்.
பின்னர், கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து கிடைக்கும் பக்கத்தில், கீழாகச் செல்லவும்.
அங்கு Show advanced settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இன்னொரு பக்கம் திறக்கப்படும். Passwords and forms என்று உள்ள இடத்திற்குச் செல்லவும்.
Autofill என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
பாஸ்வேர்ட்களை சேவ் செய்திடவா என்று கேட்டுள்ள இடத்தில், உங்கள் ஆப்ஷனை அமைக்கவும்.
பின் உங்கள் மாற்றங்களை சேவ் செய்து வெளியேறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக