ஈரோட்டில், ஒரு கல்லூரிப் பேராசிரியைக்கும், பேருந்தில் பயணித்த ஒரு பயணிக்கும், அந்த பேருந்தின் கண்டக்டருடன் கூடா உறவு ஏற்பட்டது. உறவில் ஈடுபடுவதில் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இதில், கடைசியில் அந்தப் பெண் பேராசிரியை கொலை செய்யப்பட்டு விட்டார்.
ஈரோடு சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சரவணன். 35 வயதான இவர் சேல்ஸ் ரெப் ஆக இருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் தீபா, இவருக்கு 29 வயதாகிறது. எம்.இ. படித்தவரான தீபா, தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருந்து வந்தார்.
இந்தத் தம்பதிக்கு அழகான நான்கு வயது பெண் குழந்தை உண்டு. இந்த நிலையில் தீபா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது வீட்டுக்கு அருகிலேயே உடல் கிடந்தது. இதையடுத்து போலீஸார் உடலை மீட்டு விசாரணையை முடுக்கி விட்டனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அது போலீஸாரை தலை சுற்ற வைத்து விட்டது.
நடந்தது இதுதான்...
ஈரோட்டிலிருந்து திருச்செங்கோடு வழியாக சேலத்திற்கு ஒரு தனியார் பேருந்து போய் வருகிறது. இதில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் 23 வயதான ஸ்ரீதர். இந்தப் பேருந்தில்தான் தீபா தினசரி கல்லூரிக்குப் போய் வருவாராம். அதே பேருந்தில் பயணித்து வரும் இன்னொரு நபர் சிவக்குமார்.
ஸ்ரீதருக்கும், தீபாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், சிவக்குமாருக்கும், ஸ்ரீதருக்கும் இடையேயும் கருமாந்திர உறவு ஏற்பட்டுள்ளது. மூவரும் எஸ்.எம்.எஸ். மூலமும், செல்போனில் பேசியும், வாய்ப்பு கிடைக்கும் சமயங்களிலெல்லாம் நேரிலும் சந்தித்து சந்தோஷித்து வந்துள்ளனர்.
ஒரே நேரத்தில் தீபாவுடன் கள்ளக்காதலிலும், சிவக்குமாருடன் ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்தார் ஸ்ரீதர். இந்த நிலையில் அதுதான் நிஜமான சந்தோஷத்திற்குப் பெண் கிடைத்து விட்டாளே என்று எண்ணிய ஸ்ரீதர், சிவக்குமாருடனான தொடர்பை மெதுவாக துண்டிக்க ஆரம்பித்தார். தீபா பக்கம் முழுமையாக சாய்ந்தார். தீபாவும், ஸ்ரீதருடன் முன்பை விட நெருக்கமாக பழக ஆரம்பித்தார். அவரும் சிவக்குமாரை கைவிட ஆரம்பித்தார். ஸ்ரீதருடன் மட்டும் நெருக்கம் காட்டி வந்தார்.
இதனால் சிவக்குமார் ஆத்திரமடைந்தார். தன்னை ஒரே சமயத்தில் கைவிட்ட ஸ்ரீதர் மற்றும் தீபா மீது ஆத்திரம் கொண்டார். தனக்கும், ஸ்ரீதருக்கும் இடையிலான உறவில் குறுக்கே வந்தவர் தீபாதான் என்பதால் தீபாவை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார்.
இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு இரவு தீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு முக்கியமாக பேச வேண்டும் என்று கூறி அழைத்தார். இதையடுத்து தீபா வந்தார். அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் சென்றார் சிவக்குமார். அங்கு வைத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அதில் தீபாவை சரமாரியாக கத்தியால் குத்தினார் சிவக்குமார். பின்னர் கழுத்தையும் அறுத்தார். தீபா இறந்ததும், தீபா வந்த டூவீலரை எடுத்துக் கொண்டு தப்பி விட்டார். போகும் வழியில், ஸ்ரீதருக்குப் போன் செய்து, தீபாவைக் கொன்று விட்டதாக தகவல் தெரிவித்தார்.
போலீஸார் தற்போது சிவக்குமாரைக் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக