புதன், 29 ஜனவரி, 2014

உடல்பருமன் ஒருநோய்

பிரிட்டன் ரேடன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் அடிப்­படை நோய்கள் தொடர்­பாக உடல் பருமன் பல நோய்­க­ளுக்கு மூல­கா­ர­ண­மாக அமைந்­துள்­ளது என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆய்­வின்­படி தொற்­றாத நோய்­க­ளுக்குள் பிர­தா­ன­மாக உடல் பருமன் நோய் காணப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக உடல் பரு­மனைக் குறைப்­ப­தற்கு ஆய்வு ரீதி­யாக கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது.



உடல் பரு­மனை இணங்­காண்­பது

உங்கள் இடுப்­புப்­ப­குதி சுற்­ற­ளவை அளப்­பதன் மூலம் உடற்­ப­ரு­மனை அறிந்து கொள்ள முடியும். மூச்சை வெளி­யேற்றும் போது அள­வு­நா­டாவால் உங்கள் இடுப்­புப்­ப­கு­தியை அளந்து கொள்­ளுங்கள்.

பெண் என்றால் உங்கள் இடுப்­புப்­ப­குதி 35 அங்­கு­லத்­துக்கு குறை­வாக இருக்க வேண்டும். ஆண் என்றால் 40 அங்­கு­லத்­துக்கு குறை­வாக இருக்க வேண்டும். இந்த அள­வுக்கு அதி­க­மாக இடுப்பு சுற்­ற­ளவு இருந்தால் பெண் அல்­லது ஆண் உடற்­ப­ரு­மனால் அவ­திப்­ப­டு­கின்­றார்கள் எனக்­க­ரு­தலாம். இதன்­மூலம் உங்கள் உடல் பரு­ம­னாக இருக்­கின்­றதா என்­பதை அறிந்து கொள்­ள­மு­டியும்.

உடற்­ப­ரு­ம­னான பெண்­களே அதிகம்.

இலங்­கையில் உடற்­ப­ரு­ம­னான ஆண்­க­ளை­விட பெண்­களே அதிகம். ஆண்­கள் உடலின் சக்­தியை அதி­க­மாக செல­வி­டு­கின்­றனர். இந்­த­ள­வுக்கு பெண்கள் உடற்­சக்­தியை செல­வி­டு­வ­தில்லை. இதன் கார­ண­மாக பெண்கள் உடம்­பி­லுள்ள கொழுப்­புச்­சத்து குறை­யாமல் உடலில் தங்கி விடு­கின்­றது. இதனால் பெண்கள் உடற்­ப­ருமன் நோய்க்கு அதி­க­மாக ஆளா­கின்­றனர் என ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

உடற்­ப­ரு­மனை குறைக்கும் மருந்து

வைத்­தி­ய­ரீ­தியில் உடற்­ப­ருமன் என்­பது ஒரு நோயாகும். சிகிச்­சைகள் மூலம் உடற்­ப­ரு­மனை தடுக்க எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களை இப்­போது பார்க்­கலாம். சிகிச்சை மூலம் உடலில் கொழுப்பு அடங்­கிய பகு­தி­களை வெட்டி அப்­பு­றப்­ப­டுத்­தலாம். உடற்­ப­ரு­மனை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க மருந்து வகைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் இந்த மருந்­துகள் பக்­க­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தலாம் என்­பதை ஞாப­கத்தில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

உண­வுக்­கட்­டுப்­பாடு.

பிரிட்டன் ரேடன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்­வின்­படி உடற்­ப­ரு­மனை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க உண­வுக்­கட்­டுப்­பாடு தொடர்­பாக பல முக்­கிய தக­வல்கள் வெளி­வந்­துள்­ளன. விசே­ட­மாக நாம் பார­மான உண­வு­களை உட்­கொள்­வதால் எமது வயிறு நிரம்­பி­வி­டு­கின்­றது. தானிய வகை­களும் இதில் உள்­ள­டங்கும். இருந்தும் காய்­கறி, பழ­வ­கைகள், கீரை­வ­கை­களை உட்­கொள்­வதால் நமது குடற்­ப­கு­தியில் பயன்­மிக்க பக்­டீ­றியா பெருகி உணவைக் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கவும் உணவின் ருசியை கட்­டுப்­ப­டுத்­தவும் தேவை­யான அமி­லங்­களை உற்­பத்தி செய்­கின்­றது. அப்­போது உணவு உட்­கொள்­வது போதும் என்ற சைகையை மூளைக்கு வழங்கி நாம் உணவு உட்­கொள்­வதை தடுத்து நிறுத்­து­கின்­றது.

உடற்­ப­ரு­மனை கட்­டுப்­ப­டுத்தும் உணவு

முன்னர் உடற்­ப­ருமன் தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளின்­படி பால் உண­வு­களை உட்­கொள்­வதால் நமது குடற்­ப­கு­தியில் பயன்­மிக்க பக்­டீ­றி­யாக்­களை உற்­பத்தி செய்து உணவை கட்­டுப்­ப­டுத்த உத­வு­வ­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இருந்தும் சமீ­பத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுத்­த­க­வல்­க­ளின்­படி காய்­கறி, பழங்கள் மற்றும் கீரை வகைகள் உண­வுக்­கட்­டுப்­பாட்டு;கு பெரிதும் உத­வு­வ­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

உடற்­ப­ருமன் கார­ண­மாக பல்­வேறு நோய்கள் ஏற்­படும். உடம்பில் :

• இரத்த அழுத்தம் அதி­க­ரிக்கும்.

• கொலஸ்ட்ரோல் மட்டம் அதி­க­ரிக்கும்.

• செயற்­பாட்டுத் தன்மை குறையும்.

• புகை­பி­டித்தல்.

மேற்­கண்ட நோய் அபாயம் ஒன்று அல்­லது அதற்கு மேல் உடற்­ப­ரு­ம­னுடன் காணப்­பட்டால் இரு­தய நோய், நீரி­ழிவு போன்ற நோய்கள் ஏற்­படும் அபா­ய­முள்­ளது.

உடல் எடையை குறைப்­பது.

உடல் எடையை குறைப்­ப­தன்­மூலம் இந்த நோய் அபா­யங்­களை கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்ள முடியும். ஒரு நாளிலோ அல்லது ஒரு சில நாட்களிலோ உடல் எடையை குறைத்துக் கொள்ள முடியாது. உடம்பில் 250 கிராம் முதல் 450 கிராம் வரை எடையை குறைக்க 2 தொடக்கம் 3 வாரங்களாகும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நாம் மேற்கொள்ளும் முயற்சியிலேயே உடலின் எடையை குறைப்பது தங்கியுள்ளது. ஒரு காலவரையறைக்குள் உங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல