அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

ஜப்பானில் வினோதமான 'பிரா'.. தயாரிப்பு!

தொழில்நுட்பத்தையும், உடலியல் உணர்வுகளையும் சேர்த்துக் கலக்கி புது கலவையுடன் ஒரு வினோதமான பிராவை உருவாக்கியுள்ளனர் ஜப்பானிய உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தினர்.

இவர்கள் தயாரித்துள்ள பிரா தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் இந்த பிராவின் ஹூக்கை சாதாரணமாக திறக்க முடியாதாம். உண்மையான காதல் வேட்கையுடன் அணுகினால் மட்டுமே திறக்குமாம். அப்படி ஒரு வித்தியாசமான ஹூக்குடன் இதைத் தயாரித்துள்ளனர்.

இந்த வினோத பிராவை டெமான்ஸ்ட்ரேஷன் வைத்தும் அனைவருக்கும் விளக்கியுள்ளனர்.

ஹார்மோன்- டெக்னாலஜி கலந்த கலவை
இந்த பிராவானது நமது ஹார்மோன்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் கூட்டு செயல்பாட்டில் செயல்படுகிறாம்.

உண்மையான காதலுடன்
உண்மையான காதலுடன்தான் இதைத் திறக்க முடியுமாம். மற்றபடி முரட்டுத்தனமாகவோ, எந்தவிதமான உணர்வு இல்லாமலோ முயன்றால் திறக்கவே முடியாதாம்.

ட்ரூ லவ் டெஸ்டர்
ட்ரூ லவ் டெஸ்டர் என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். சென்சார்கள் மற்றும் சிறப்பு கேட்ஜெட் மூலம் இந்த பிரா செயல்படுகிறது. இவற்றை ஒரு மொபைல் போன் 'ஆப்' மூலம் இணைத்து விடுகின்றனர். இது பிரா அணிந்திருப்போரின் இதயத் துடிப்பைக் கண்காணிக்கிறது. மேலும் உடலில்ஏற்படும் வெப்பத்தையும் அது கணக்கிடுகிறது.

உண்மையான உணர்விருந்தால்
அந்தப் பெண்ணின் உடலில் உண்மையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறியும்போது பிரா தானாகவே கழன்று விடுகிறது. அதாவது அந்தப் பெண்ணின் உடலில் ஏற்படும் உணர்வுகளைக் கண்டறிந்து அதற்கேற்ப பிராவைத் திறக்க உதவுகிறது இந்த 'ஆப்'.

ராவ்ஜோர்...
பிரபலமான உள்ளாடை நிறுவனமான ராவ்ஜோர்தான் இதை உருவாக்கியுள்ளது. ஆனால் இதை விற்பனைக்கு விடப் போவதில்லையாம். மாறாக பப்ளிசிட்டிக்காக உருவாக்கியுள்ளனராம். தங்களது நிறுவனத்தின் 10வது ஆண்டையொட்டி இந்த வித்தியாச பிராவை விளம்பரத்திற்காக வடிவமைத்துள்ளனராம்.

மெக்கானிக்கல் ஹூக்
இந்த பிராவில் மெக்கானிக்கல் ஹூக் அமைத்துள்ளனர். அதில் சிவப்பு நிற விளக்கையும் சின்னதாக பொருத்தியுள்ளனர். பெண்ணின் உணர்வுகள் கிளர்ந்து எழும்போது தானாகவே அந்த விளக்கு எரிந்து, ஹூக் படீரென்று திறக்கிறது.

ஏன் இந்த விளம்பரம்
ஏன் இப்படி ஒரு விளம்பரம் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் யுகா தமுராவிடம் கேட்டால், ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அது மட்டுமல்லாமல், ஆண், பெண்களுக்கு இடையே ரொமான்ஸ் உணர்வுகள் கிளர்ந்தெழும் வகையிலான விஷயமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.. விளைவு இந்த பிரா என்றார்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக