அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியை குறித்து யூ டியூபில் பதிவு வெளியிட்ட முன்னாள் மாணவி

 Andrea Michelle Cardosa
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆசிரியையை 16 வருடங்கள் கழித்து தற்போது யூ டியூப் வழியாக வெளிப்படுத்தி உள்ளார். ஆண்ட்ரியா கர்டோசா (வயது 40) என்ற அந்த ஆசிரியையை மீது குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் புரிந்ததாக 5 வழக்குகளும் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் என்ற வகையில் 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மாணவிக்கு தற்போது வயது 28.



 Jamie Carillo, 28
அவர் தனது 12வது வயதில் மாணவியாக இருந்தபோது, கர்டோசா கூடைப்பந்து பயிற்சியாளராக இருந்துள்ளார். கர்ரில்லோ என்ற அந்த மாணவி 13 வருடங்கள் கழித்து சம்பவத்தை வெளியிட்டதற்கு அடிப்படை காரணம் குழந்தைகள் மீதான குற்றம் என்பதால் அது கார்டோசாவுக்கு தண்டனை கிடைக்காமல் செய்து விடும் என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கர்ரில்லோ வீடியோ பதிவை கார்டோசா பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டார்.

அங்குள்ள அதிகாரிகள் இதனை போலீசாரிடம் தெரிவித்து விட்டனர். இதனை அடுத்து உதவி பிரின்சிபால் பதவியை கார்டோசா ராஜினாமா செய்து விட்டார். யூ டியூபில் வெளியான ஒரு சில தினங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அதனை பார்த்து விட்டனர். இவரது தைரியமான முடிவை அடுத்து பாதிக்கப்பட்ட மற்றொரு மாணவியும் இதேபோன்று புகார் தெரிவிக்க முன் வந்துள்ளார்.

கார்டோசா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 பாலியல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 15 பாலியல் குற்றச்சாட்டுகள் யூ டியூப் பதிவை வெளியிட்டவரின் அடிப்படையிலும் மற்றும் 2வது பெண் கூறியுள்ள மற்றொரு பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையிலும் என கார்டோசா மீது 16 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக