கம்ப்யூட்டரில் பிரச்னை ஒன்று ஏற்படுகையில், அதனை மற்றவருக்கு இதனால் தான், அல்லது இந்த செயல்பாட்டின் போதுதான் பிரச்னை ஏற்பட்டது என்று சொன்னால் தான் புரியும். இதனை எப்படிச் சொல்வது?
பிரச்னை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் செயல்பாட்டில், என்ன என்ன ஏற்பட்டது என நமக்குத் தெரியுமா? இதனை பதிவு செய்திடும் வகையில் டூல் ஒன்றை விண்டோஸ் 7 கொண்டுள்ளது.
இந்த டூலின் பெயர் Problems Step Recorder. இதனை அணுக, ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்து, தேடல் கட்டத்தில் “Problem Record” என டைப் செய்து எண்டர் தட்டவும்.
அடுத்து, Record steps to reproduce a problem என்பதில் கிளிக் செய்திடவும்.
இது Problem Steps Recorder டூலை இயக்கத் தொடங்கும்.
உடன் Start Record என்பதில் அழுத்த, நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் அனைத்தும், டெஸ்க் டாப்பில் பதிவு செய்யப்படும்.
ஒவ்வொரு முறை மவுஸால் கிளிக் செய்திடும்போதும், டெஸ்க்டாப் திரை, ஸ்கிரீன் ஷாட் ஆகப் பதிவு செய்யப்படும்.
இவை அனைத்தும் “problem steps” என்றபடி வரிசையாக, தானாகவே பதிவு செய்யப்படும். பதிவு செய்தது போதும் என்று அதை நிறுத்தினால், பைலை ZIP file ஆக சேவ் செய்திடும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.
அதே போல் பதிவு செய்திடலாம். பின்னர், தேவைப்படுகையில், இதனை விரித்து, ஸ்கிரீன் ஷாட்களை ஒவ்வொன்றாகப் பார்த்து, எப்போது பிரச்னை ஏற்பட்டது என்று அறியலாம்.
அல்லது, பிரச்னைகளை அறிந்து தீர்க்கக் கூடிய தொழில் நுட்பவியலாளருக்கு, இந்த பைலை அனுப்பலாம். அவர் அதனை விரித்துப் பார்த்து, பிரச்னையை உணர்ந்து கொண்டு, அதற்கான தீர்வினைத் தருவார். இப்படி ஒரு டூல் உள்ளது என, பல தொழில் நுட்ப வல்லுநர்களுக்கே தெரியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக