அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 27 ஜூலை, 2014

விண்டோஸ் 7ல் சில ஷார்ட்கட் கீகள்

1. புரோகிராமிற்கான ஐகான் ஒன்றில் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் விண்டோ ஒன்று ஏற்கனவே திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், புதியதாக ஒரு செயல்பாட்டு விண்டோ திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, டாகுமெண்ட் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். புதிய விண்டோ ஒன்றில், புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில், இவ்வாறு செய்திடலாம். புதிய வேர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும்.



2. ஐகான் அழுத்துகையில், ஷிப்ட் + கண்ட்ரோல் கீகளை அழுத்திக் கொண்டு செய்தாலும், மேலே கூறிய செயல்பாடு மேற்கொள்ளப்படும். இதில் என்ன வேறுபாடு என்றால், இந்த விண்டோ, முற்றிலும் அட்மினிஸ்ட் ரேட்டர் உரிமையுடன் திறக்கப்படும்.

3. கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, இதே போல புரோகிராம் ஐகான் ஒன்றில் கிளிக் செய்தால், திறந்து செயல்படுத்தப்படும் விண்டோக்களில், இறுதியாகத் திறந்த விண்டோ திறக்கப்படும்.

திறக்கப்பட்ட விண்டோவின் மேல் பட்டியில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், அது மினிமைஸ் செய்யப்படும். இதனை மானிட்டர் திரையில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று அமைக்கலாம். இதன் அளவினை நாம் விரும்பும் வகையில் சிறிதாக்கலாம்; பெரியதாகவும் அமைக்கலாம். இதனை மவுஸ் தொடாமலும் அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ அவை:

விண்டோஸ் லோகோ கீயினை அழுத்திக் கொண்டு அப் அம்புக்குறியினை அழுத்தினால், விண்டோவின் அளவைப் பெரிதாக்கலாம்.

அதேபோல, விண்டோஸ் லோகோ கீயினை, வலது அல்லது இடது அம்புக் குறியுடன் அழுத்த, விண்டோ திரையின் இடது அல்லது வலது பக்கமாக நகர்த்தப்படும்.

இன்னும் சில ஷார்ட் கட் கீகளை இங்கு குறிப்பிடலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் நிறைய விண்டோக்கள் திறந்த நிலையில் உள்ளதா? ஒவ்வொன்றிலும் ஏதேனும் புரோகிராம் ஒன்று திறக்கப்பட்டு, பைல் ஒன்று செயல்பாட்டில் உள்ளதா? அல்லது எந்த செயல்பாடும் இன்றி திறக்கப்பட்ட நிலையில் உள்ளதா?

இவற்றை மூடிட, Windows Logo + Home என்ற கீகளை அழுத்தவும்.
ஒவ்வொரு முறை அழுத்தும்போதும், ஒவ்வொரு விண்டோ மூடப்படும். நீங்கள் அப்போது டெஸ்க்டாப்பில் திறந்து வைத்து செயல்படும் விண்டோ மட்டும் திறந்தபடியே இருக்கும்.

திரையில் உள்ள சிறிய எழுத்துக்களைப் பார்க்க இயலவில்லையா?
விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, நம் லாக் பட்டன் அழுத்திய நிலையில் + கீயை அழுத்தவும்.

விண்டோஸ் இயக்கத்தின் மேக்னிபையர் செயல்படத் தொடங்கும்.
முதலில் இருந்த விண்டோவிற்கு மேலாக ஒரு சிறிய விண்டோ காட்டப்படும்.

பழைய விண்டோவில் கர்சர் இருக்கும் பகுதி மட்டும் இங்கு பெரிது படுத்தப்பட்டு காட்டப்படும். மைனஸ் கீ அழுத்தினால், காட்டப்படும் அளவு குறைத்துக் காட்டப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக