அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 29 ஜூலை, 2014

விண்டோஸ் 8: டைல்ஸ் மாற்றம்

நம்மில் பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஏனென்றால், தற்போது கம்ப்யூட்டர் வாங்கும்போது, விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. மேலும், கம்ப்யூட்டரை அப்டேட் செய்தாலும், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் அப்டேட் செய்யப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பல விஷயங்கள் புதியதாய்த் தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவது குறித்த புதிய பயனாளர்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியதுள்ளது.



இதில் அதிகம் கவனிக்க வேண்டியது இதில் தரப்பட்டுள்ள ஸ்டார்ட் ஸ்கிரீன். இதில் சிறிய மற்றும் சற்றுப் பெரிய டைல்ஸ்கள் காட்டப்படுகின்றன. இவை "live” மற்றும் static என்ற தன்மையைக் கொண்டுள்ளன. Live என்பது அவ்வப்போது அப்டேட் செய்யப்படும் அப்ளிகேஷன்களுக்கானது. Static என்பது அப்படியே மாற்றமின்றி இருக்கும் ஐகான் ஆகும்.

இந்த வகையில் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், அதில் காட்டப்படும் அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ் கட்டங்களை இடம் மாற்றி, தங்கள் பயன்பாட்டிற்கேற்றபடி அமைத்துக் கொள்ள விரும்பு வார்கள். சிலர் இதன் அளவினையும் மாற்றி அமைத்துக் கொள்ள திட்டமிடுவார்கள்.

அப்போதுதான், எளிதாகவும் விரைவாகவும் தாங்கள் விரும்பும் புரோகிராம்களை இயக்க முடியும். இவர்களின் விருப்பப்படி இவற்றை அமைத்துக் கொள்ள வழி விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ளது. அதற்கான குறிப்பு இங்கே தரப்படுகிறது.

இடம் மாற்றி நகர்த்தி வைக்க: டைல் ஒன்றை நகர்த்துவது மிகவும் எளிது. நம் விரலை அதன் மீது வைத்து (தொடு உணர் திரை உள்ள கம்ப்யூட்டராக இருந்தால்) அல்லது டைலின் மீது கிளிக் செய்து அப்படியே இழுத்து புதிய இடத்தில் விட்டுவிடலாம். பயனாளர் விருப்பப்படி, அவர்கள் பயன்படுத்தும் புரோகிராம்களின் தன்மைக்கேற்ப இது போல இழுத்து வந்து, குழுவாக அமைக்கலாம். இவ்வாறு அமைக்கும்போது, அந்த இடத்தில் உள்ள மற்ற டைல்கள் சற்றே இடம் நகர்ந்து, புதிய டைலுக்கு இடம் தருவதனையும் அறியலாம்.

டைலின் அளவை மாற்றுதல்: டைலின் அளவை மாற்றுவதையும் நாம் நேரடியாக மேற்கொள்ளலாம். சில டைல்களின் அளவை மட்டும் மாற்ற முடியாது. ஆனால், பெரும்பாலான டைல்களின் அளவு மாற்றும் வகையிலேயே தரப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, பெரிய டைல் ஒன்று இருந்தால், அதில் ரைட் கிளிக் செய்திடுகையில், ஒரு பாப் அப் கட்டம் ஒன்று திரையின் கீழாகத் தரப்படும். இதில் தரப்பட்டுள்ள சிறிய பட்டன் ஒன்றைக் கிளிக் செய்தால், டைலின் அளவினை மாற்ற ஆப்ஷன் கிடைக்கும். இதே போல, சிறிய டைலின் பட்டனை அழுத்த பெரிய அளவில் அது மாற்றம் அடையும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக