அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 27 ஜூலை, 2014

மானிட்டர் திரையில் எந்த எந்த கீகள் அழுத்தப்பட்டு இயக்கத்திற்காக உள்ளன என்று அறிய

இணையத்தில் இதற்கென புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. அதன் பெயர் கீ போர்ட் இண்டிகேட்டர் (Keyboard Indicator). இதனை இயக்கிவிட்டால், கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக் மற்றும் நம் லாக் கீகளின் அப்போதைய நிலையை சிஸ்டம் ட்ரேயில் காட்டும்.



நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், அதற்கேற்ற வகையில் இதன் செட்டிங்ஸ் அமைக்கப்பட வேண்டும்.

ஸ்டேட்டஸ் பாரில் இந்த கீகள் என்ன நிலையில் உள்ளன என்று காட்டப்படும். கீகள் அழுத்தப்பட்டிருந்தால், அதற்கான இடத்தில் சிகப்பு வண்ணமும், அழுத்தப்படாத நிலையில் ஊதா நிறமும் காட்டப்படும்.

அல்லது இதற்கான ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்றால், கீகள் எந்த நிலையில் உள்ளன என்று நமக்கு செய்தியாகக் கிடைக்கும்.

கீ அழுத்தப்படும்போது, அந்த வேளையிலும் மாறுதல் குறித்த செய்தி காட்டப்படும்.

இந்த செய்தி திரையின் எந்தப் பகுதியில் காட்டப்பட வேண்டும் என்பதனையும் நாம் வரையறை செய்திடலாம்.

இதனால், நாம் அறியாமல் இந்த கீகளை அழுத்தினால், உடனே எச்சரிக்கையாகச் செயல்படலாம்.

இந்த புரோகிராமினை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட http://sites.google.com/site/roidayan/projects/keyboardindicator என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

இந்த புரோகிராம் செயல்பட டாட் நெட் பிரேம் ஒர்க் 2, சிஸ்டத்தில் இயக்கத்தில் இருக்க வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக