அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 29 ஜூலை, 2014

ராஜபக்சே விமானம் தரையிறங்க அனுமதி மறுத்ததா கனடா?

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கியூபா செல்லும் வழியில் அவரது விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப கனடா அனுமதிக்கவில்லை என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.



கியூபாவுக்கு கடந்த மாதம் ராஜபக்சே சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். அவர் செல்லும் வழியில் விமான எரிபொருள் நிரப்புவதற்காக கனடாவில் தரை இறங்க அனுமதி கோரப்பட்டது.
ஆனால் ராஜபக்சே விமானம் கனடாவில் தரை இறங்க அனுமதி தர அந்நாட்டு அரசு மறுத்து விட்டதாக தற்போது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈழத் தமிழர் பிரச்சனையில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் நாடு கனடா. ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை கனடா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக