அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 29 ஜூலை, 2014

பார்மட்டிங் ஷார்ட்கட்

எக்ஸெல் செல் ஒன்றில், அதன் தகவல்களைத் தனியே பார்மட்டிங் செய்கையில், ஒவ்வொன்றுக்கும் மெனுவிற்குச் செல்ல வேண்டாம். இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துங்கள். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து அழுத்தினால் 15.45 என்ற நேரக் குறியீட்டை 3:45 PM என மாற்றும். Ctrl + Shift + # என்ற கீகள் 11/4/2007 என்ற நாள் குறியீட்டை 4Nov07 என மாற்றும். Ctrl + Shift + $ என்ற கீகள் 50 என உள்ள எண்களை கரன்சியுடன் ($50.00) சேர்த்துக் காட்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக