அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு

இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்றபடி, ஹாட் கீகளை அமைத்துக் கொள்ள, இணையத்தில் இதற்கென பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில், ஹாட் கீஸ் (Hotkeyz) என்ற புரோகிராம் எளிதாகவும், சிறந்த முறையிலும் ஹாட் கீக்களை அமைக்க உதவுகிறது.


இதற்கான தள முகவரி http://www.skynergy.com/hotkeyz.html. இதனைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டு இயக்கவும்.
அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க, கண்ட்ரோல் பேனல் என்ட்ரிகளைக் கொண்டு வர, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட போன்ற வேலைகளுக்கான ஷார்ட் கட் கீகளை நாமே செட் செய்திட வழி தருகிறது.

இந்த புரோகிராமினை ஸ்கை எனர்ஜி என்ற நிறுவனம் இணையத்தில் இலவசமாகத் தருகிறது.

வழக்கமான வேலைகள் மட்டுமின்றி, ரீசைக்கிள் பின்னில் உள்ள நீக்கிய பைல்களை முழுமையாக நீக்க, சிஸ்டத்தை ஹைபர்னேஷன் நிலைக்குக் கொண்டு செல்ல என வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளுக்கும் இந்த புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக