அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

கடலைப்பருப்பு சட்னி

தேவையானவை:

கடலைப்பருப்பு - 1 கைப்பிடி,
சின்ன வெங்காயம் - 5,
தக்காளி -2,
காய்ந்த மிளகாய் - 4,
பெருங்காயம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 5,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி.



செய்முறை:

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், கடலைப் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.

அத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி எடுத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.


--------------------------------------

இன்னும் ஓர் செய்முறை:

தேவையானவை:

கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 5
புளி - மிகவும் சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
கறிவேப்பில்லை - 5 இலை
எண்ணெய் - 1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி


செய்முறை:

முதலில் ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை வறுத்து தனியே வைக்கவும்.

அதே கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பினை நன்றாக வறுத்து கொள்ளவும்.

கடலைப்பருப்பினை சிறிது நேரம் ஆறவிடவும்.

பின்பு புளி, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் கடலைப்பருப்பினை சிறிது தண்ணீர் உடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

பின்பு அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை எண்ணெயில் போட்டு தாளித்து கொட்டவும்.

இப்பொழுது சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி.

இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக