அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இணையத்திலிருந்து படங்களை காப்பி செய்யும் போது...

சில வேளைகளில் இணையத்திலிருந்து படங்களை காப்பி செய்திட முயற்சிக்கையில், கம்ப்யூட்டர் செயல் இயக்கம் இன்றி நின்று விடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது?



இந்த கேள்விக்கான பதிலைத் தரும் முன், சில பொதுவான தகவல்களை இங்கு தருகிறேன்.

ஒரு பட பைலை காப்பி செய்வது என்பது ("Copy Image”) கிளிப் போர்டில், அந்த இமேஜ் பைல் மட்டுமின்றி, படம் சார்ந்த டேட்டாவினையும் காப்பி செய்வதாகும்.

24 பிட் அளவில் உள்ள ஒரு படமானது, 21,600 x 10,800 x 3 (24 bit image) = 699,840,000 டேட்டாவினைக் கொண்டிருக்கும்.

இது ஏறத்தாழ 700 எம்.பி. ஆகும். ஜேபெக் பைல் இந்த டேட்டாவினைச் சுருக்கிப் பதியும் வழிமுறையைக் கொண்டிருப்பதால், கம்ப்ரஸ் செய்யப்பட்ட பைலின் அளவு 6 எம்.பி. ஆக இருக்கும்.

கம்ப்யூட்டர் ஏன் முடங்குகிறது என்றால், அதன் ராம் மெமரியை இந்த 700 எம்.பி. இமேஜ் டேட்டா முற்றிலுமாக அடைத்துக் கொள்கிறது என்ற நிலை தான். எனவே, உங்கள் கம்ப்யூட்டரில் 4 ஜி.பி.க்கும் குறைவாக ராம் மெமரி இருந்தால், மெமரியை மாற்றி அமைத்து பதிய இந்த டேட்டா முயற்சிக்கும். இதனால், கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் குறையும்; அல்லது முடக்கப்படும்.

அப்படியானால் தீர்வு என்ன? இமேஜ் பைல்களை காப்பி செய்திட கிளிப் போர்டினைப் பயன்படுத்த வேண்டாம். அதிக ராம் மெமரி இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி, இதற்கான நேரமும் அதிகமாக தேவைப்படும். சில பிரவுசர்கள் இமேஜ் சார்ந்த டேட்டாவினை காப்பி செய்திடாமல், பைலை அப்படியே காப்பி செய்திடும். பயர்பாக்ஸ் பிரவுசரில் இந்த வசதி உண்டு.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக